• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ரசாயனக் கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் கைப்பட ஷாம்பூ தயாரிக்கலாம் : இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!

ரசாயனக் கலப்படம் இல்லாமல் வீட்டிலேயே உங்கள் கைப்பட ஷாம்பூ தயாரிக்கலாம் : இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!

ஷாம்பூ

ஷாம்பூ

ரசாயனங்கள் அதிகம் இல்லாமலும், மூலிகை பொருட்களை கொண்டும் நீங்கள் வீட்டிலேயே பலவிதமான ஷாம்புக்களை தயாரிக்கலாம்.

  • Share this:
தலைமுடியை பராமரிக்கும் விஷயத்தில் ஷாம்பு என்ற பொருள் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதிலும், பொடுகு தொல்லை, வறட்சி ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே பல விதமான ஷாம்புகளை எண்ணற்ற பிராண்டுகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன.

அதிலும், தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து ஷாம்புகளும் அதிக ரசாயனங்கள் உள்ளடக்கியதாக இருக்கின்றன. எனவே ரசாயனங்கள் அதிகம் இல்லாமலும், மூலிகை பொருட்களை கொண்டும் நீங்கள் வீட்டிலேயே பலவிதமான ஷாம்புக்களை தயாரிக்கலாம். அது எப்படி என்பதை பற்றி பின்வருமாறு காண்போம்.

குறைவான ரசாயனங்கள் உள்ளடக்கிய ஷாம்பு:

தேவையான பொருட்கள்:

டிஸ்டில்ட் வாட்டர் - 1/4 கப்
காஸ்டில் சோப் - 1/4 கப்
தாவர எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 தேக்கரண்டி
எசென்ஷியல் ஆயில் - 2 சொட்டுகள்



செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில், டிஸ்டில்டு வாட்டர், காஸ்டில் சோப், தவற எண்ணெய், கற்றாழை ஜெல், மற்றும் உங்களக்கு பிடித்த வாசனை கொண்ட ஏதேனும் ஒரு எசென்ஷியல் ஆயில் 2 சொட்டுகள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளுங்கள்.

இப்பொது அதனை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஷாம்பு தயார். ஆனால் இந்த ஷாம்பு கடைகளில் விற்பனையாகும் ஷாம்பூவை போல திடமாக இருக்காது. மேலும், அதிக நுரையை தராது என்பதை கவனிக்க வேண்டும்.

உங்கள் மூக்கை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் எளிய வழிகள்!

மூலிகை பொருட்களை கொண்டு ஷாம்பு எப்படி தயாரிப்பது?

ரசாயனங்கள் வைத்துதான் ஷாம்பு தயாரிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. சில மூலிகை பொருட்களை கொண்டும் ஷாம்பு தயாரிக்கலாம். அவை எப்படி என்பது குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த நெல்லிக்காய் - 1/2 கப்
உலர்ந்த சீயக்காய் - 1/2 கப்
பூந்தி கொட்டை -10
தண்ணீர் - 1.5 லிட்டர்



செய்முறை:

ஒரு அகலமான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வெந்தயம், உலர்ந்த நெல்லிக்காய், சீயக்காய், பூந்தி கோட்டை ஆகிய அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த கலவை கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.

இந்த கலவை கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கொண்டதாக மாறும் வரை தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இப்போது அந்த கலவை தயாரானதும். அதில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். அவ்வளவு தான் இயற்கை மூலிகைகளை கொண்டு வீட்டிலேயே ஷாம்புவை தயார் செய்து கொள்ளலாம்.

தலைமுடி உதிர்வைத் தடுக்க கற்றாழை ஷாம்பூ - வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

சீயக்காய் பொடி வைத்து ஷாம்பு தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

சீயக்காய் - 1 கிலோ
செம்பருத்திப்பூ - 50
பூலாங்கிழங்கு - 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது - 25
பாசிப்பருப்பு - கால் கிலோ
மரிக்கொழுந்து - 20 குச்சிகள்
மல்லிகை பூ காய வைத்தது - 200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை - 3 கப் அளவு.



செய்முறை:

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதில் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் செம்பருத்திப்பூ இருப்பதால் ஷாம்புவை போலவே நல்ல நுரை வரும்.

அதிலும் சீயக்காய் ஏராளமான நண்மைகளை முடிகளின் வேருக்கு அளிக்கின்றன. முடியை வலுவடைய செய்கின்றன. பொடுகு தொல்லை, வறட்சி போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. ரசாயனங்கள் பின் செல்லலாம் இதுபோன்ற எளிய, ஆரோக்கியமான இயற்கை வழிகளை பின்பற்றினாலே போதும் கூந்தல் பலமடையும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: