உதட்டு வறட்சி, வெடிப்புகளுக்கு உதவும் ’லிப் பால்ம்’... வீட்டிலேயே செய்யலாம்..!

”அதீத வறட்சி, அதனால் உதட்டு வெடிப்புகள் வந்தால் பார்க்க லட்சமாக இருக்காது. முகத்தோற்றத்தையே கெடுத்துவிடும்”

உதட்டு வறட்சி, வெடிப்புகளுக்கு உதவும் ’லிப் பால்ம்’... வீட்டிலேயே செய்யலாம்..!
லிப் பாம்
  • Share this:
உதடு ஈரப்பதம் இல்லாதது என்பதால் அதற்கு அடிக்கடி ஈரப்பதம் அளிப்பது நம்முடைய வேலைதான். இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் அதீத வறட்சி, அதனால் உதட்டு வெடிப்புகள் வந்தால் பார்க்க லட்சமாக இருக்காது. முகத்தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே வீட்டிலேயே சிம்பிளாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

லிப்ஸ்டிக் - எந்த நிறமாகவும் இருக்கலாம். அது நீங்கள் பயன்படுத்தக்கூடிய லிப்ஸ்டிக்காகவும் இருக்கலாம். நிறம் உங்கள் விருப்பம்.


வேஸ்லின் , பெட்ரோலியம் ஜெல்

தேங்காய் எண்ணெய்

காலி டப்பா

செய்முறை :

சின்ன கின்னத்தில் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய், பெட்ரோலியம் ஜெல் அல்லது வேஸ்லின் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதை ஸ்பூன் பயன்படுத்தி நன்குக் கலக்குங்கள். அதோடு நீங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கில் ஒரு இஞ்ச் வெட்டி போடுங்கள்.

மூன்றும் நன்கு மிக்ஸாகும் வரை கிளறிக்கொண்டே இருங்கள்.

வீட்டிலேயே இயற்கையான முறையில் ’ஹேர் டை’ செய்ய அருமையான டிப்ஸ்..!

நன்கு கிளறியதும் அதை காலி டப்பாவில் ஊற்றி காற்று புகாதவாறு மூடுங்கள். அதை அப்படியே ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வையுங்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் கெட்டியாக இருக்கும். தற்போது லிப் பால்ம் ரெடி. அதை உதட்டில் தடவிக்கொள்ளலாம்.

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading