மென்மையான பாதங்களுக்கு ஃபுட் ஸ்க்ரப்: வீட்டிலேயே தயாரிக்கும் வழிமுறைகள்

மாதிரிப் படம்

உடலின் ஒட்டுமொத்த நரம்புகளின் இணைப்புகளும் கால் பாதங்களில்தான் இருப்பதால் உடல் தானாக ஓய்வு நிலையைப் பெறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
எத்தனை வேலைக் களைப்பு இருந்தாலும் காலை பிடித்துவிட்டால் போதும் உடல் ஓய்வு நிலையை அடைந்து நிம்மதி பெறும். அதனால்தால் இன்று பாடி மசாஜ் செண்டர்களைக் காட்டிலும் ஃபுட் மசாஜ் செண்டர்கள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமன்றி உடலின் ஒட்டுமொத்த நரம்புகளின் இணைப்புகளும் கால் பாதங்களில்தான் இருக்கின்றன. அதனால்தான் உடல் தானாக ஓய்வு நிலையைப் பெறுகிறது.

நீங்களும் வீட்டிலேயே ஃபுட் மசாஜ் செய்து உடலுக்கு ஓய்வு அளிக்கலாம். இவ்வாறு செய்வதால் உடல் புத்துணர்ச்சி பெறும். கால் பாதங்களை மென்மையாக்கி, மசாஜ் செய்யத் தேவைப்படும் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயாரிக்கலாம். எவ்வாறு என்பதைக் கீழேக் காணலாம்.

தேவையான பொருட்கள்

டெட் சீ சால்ட் - 1 கப்
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
நறுமண எண்ணெய் (எதுவாகவும் இருக்கலாம்) - 2 tsp
வைட்டமின் E எண்ணெய் - 1 tspசெய்முறை :

  • டெட் சீ சால்டுடன், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய். உங்களுக்குப்பி பிடித்த நறுமண எண்ணெய் மற்றும் வைட்டமின் E எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

  • அதிக வறட்சி இல்லாத கால் பாதங்களுக்கு நறுமண எண்ணெய், வைட்டமின் எண்ணெய் தேவைப்படாது.

  • கால் பாதங்களை சுடு நீரில் கழுவிய பின் ஸ்க்ரப்பைக் கொண்டு மசாஜ்  செய்யவும்.

  • பின் 5 நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும்.

  • இப்படி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

  • ஸ்க்ரப்பை காற்றுப் புகாத பாட்டிலி அடைத்து வைத்துக் கொண்டால்; தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்துக் கொள்ளலாம்.


 
Published by:Sivaranjani E
First published: