முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஜொலிக்கும் சருமத்தைப் பெற வீட்டிலேயே தயாரிக்கலாம் வெந்தைய ஜெல் கிரீம் : தெரிந்துகொள்ள கிளிக் செய்க

ஜொலிக்கும் சருமத்தைப் பெற வீட்டிலேயே தயாரிக்கலாம் வெந்தைய ஜெல் கிரீம் : தெரிந்துகொள்ள கிளிக் செய்க

வெந்தைய ஜெல் கிரீம்

வெந்தைய ஜெல் கிரீம்

  • 1-MIN READ
  • Last Updated :

வெந்தையம் பயன்படுத்துவதால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்கு நீங்கும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க உதவும். எனவே கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெந்தயம் - 2 ஸ்பூன்

மஞ்சள் - அரை ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்தண்ணீர் - ஒரு கப்

செய்முறை :

வெந்தயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதோடு மஞ்சளும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

நன்குக் கொதித்து திட நிலைக்கு வரும்போது அணைத்துவிடவும். அதை தற்போது வடிகட்டியில் இறுத்து தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தற்போது கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் சேர்த்து அதில் இந்த வெந்தயத் தண்ணீரையும் , ஒரு சிட்டிகை மஞ்சள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.

அதை தற்போது நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஜெல் தன்மையில் நன்குக் கலந்ததும் அதை காற்று புகாத பாடிலில் கொட்டி பயன்படுத்துங்கள்.

தினமும் இரவு முகத்தில் தேய்த்து வட்ட பாதையில் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பிரகாசித்து தெளிவாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

First published: