ஃபேஸ் வாஷுக்கு பதிலா இந்த பாரம்பரிய பொடியை தேய்த்து பாருங்கள் : முகம் பிரகாசமாக அழகு பெறும்..!

ஃபேஸ் வாஷுக்கு பதிலா இந்த பாரம்பரிய பொடியை தேய்த்து பாருங்கள் : முகம் பிரகாசமாக அழகு பெறும்..!
அழகு குறிப்பு
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 4:50 PM IST
  • Share this:
முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள், பயத்தமாவு என இவைதான் நம் பாரம்பரிய காஸ்மெடிக் பொருட்கள்.

கெமிக்கல் முறையிலான காஸ்மெடிக் பொருட்கள் வளர்ச்சியடைந்தாலும் இயற்கை அழகுக் குறிப்புகளை இன்றளவும் பெண்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பொடியை தினமும் ஃபேஸ் வாஷுக்கு பதிலாக முகத்தில் தேய்த்துப் பாருங்கள். அப்பழுக்கற்ற சருமத்தைப் பெறுவீர்கள்.

தேவையான பொருட்கள்


முல்தானி மெட்டி - 1 tsp
கடலை மாவு - 1 tsp
கருப்பு உளுந்து மாவு - 1/2 tspஅரிசி மாவு - 1/2 tsp
மஞ்சள் - 1/2 tspசெய்முறை :

ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள மாவை சரியான அளவில் கலந்துகொள்ளுங்கள்.பின் மூடிவிட்டு குளுக்குங்கள். அவ்வளவுதான் மாவு ரெடி. இதை அரை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் சோப்பு போட்டு தேய்ப்பது போல் தேய்த்துவிட்டுப் பின் கழுவுங்கள்.

உடைந்த லிப்ஸ்டிக்கை இப்படியும் பயன்படுத்தலாமா?

இவ்வாறு தினமும் செய்ய முகம் எந்தவித பருக்கள், அழுக்குகள் இன்றி தெளிவாக இருக்கும்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading