கண்களைச் சுற்றி சுருக்கமற்ற பொலிவுக்கு 'ஐ க்ரீம்' : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்

கண்களை சுற்றி விழும் சுருக்கம் முதுமைத் தோற்றத்தை உண்டாக்கு. எனவே அதை தவிர்க்க ஐ கிரீம் அப்ளை செய்வது நல்லது.

கண்களைச் சுற்றி சுருக்கமற்ற பொலிவுக்கு 'ஐ க்ரீம்' : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்
ஐ கிரீம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 2:38 PM IST
  • Share this:
கண்களுக்கு ஐ க்ரீம் அப்ளை செய்வதால் ஈரப்பதம் கிடைக்கும். அதோடு கண்களை சுற்றி விழும் சுருக்கம் முதுமைத் தோற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க ஐ க்ரீம் அப்ளை செய்வது நல்லது. இதை கண்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி இயற்கையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் எண்ணெய் - 1/2 கப்


விட்டமின் ஈ எண்ணெய் - 6 காப்ஸ்யூல்
வாசனை எண்ணெய் - தேவைப்பட்டால்

செய்முறை :

ஒரு இறுகிய மூடி கொண்ட டப்பாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதில் விட்டமின் ஈ எண்ணெய்யை உடைத்து ஊற்றுங்கள்.

இரண்டையும் நன்கு கலந்துகொள்ளுங்கள்.

வாசனை திரவியம் தேவைப்பட்டால் 2 சொட்டு கலந்து கொள்ளுங்கள்.

உடைந்த லிப்ஸ்டிக்கை இப்படியும் பயன்படுத்தலாமா?

நன்கு கலந்ததும் டப்பாவை மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

எண்ணெய் கெட்டிப் பதத்தில் உறைந்துவிடும்.
இரவு தூங்கும் முன் தேவையான அளவு எடுத்து கண்களை சுற்றித் தடவி மசாஜ் செய்யுங்கள்.

பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை துடைத்துவிடுங்கள்.

இப்படி தொடர்ந்து செய்ய கண்கள் கருவளையம், சுருக்கம் இன்றி ஆரோக்கியமாக இருக்கும்.

 

 
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading