முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 100 பேரு இருந்தாலும் நீங்க மட்டும் பளிச்சினு தெரியனுமா..? இந்த மாஸ்க் டிரை பண்ணுங்க..!

100 பேரு இருந்தாலும் நீங்க மட்டும் பளிச்சினு தெரியனுமா..? இந்த மாஸ்க் டிரை பண்ணுங்க..!

சார்க்கோல் நன்மை

சார்க்கோல் நன்மை

charcoal mask : சருமம் மற்றும் முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்ய சார்கோல் பயன்படுகிறது. அதுமட்டும் அல்ல, கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை முழுவதும் சரி செய்கிறது. இப்படி பல நன்மைகளை கொடுக்கும் கருத்தூளை வைத்து வீட்டிலேயே மாஸ்க் செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண் - பெண் என அனைவரும் முகப்பரு, கரும்புள்ளி, முக சுருக்கம் இல்லாமல் என்றும் அழகாகவும், இளமையாகவும் இருக்க விரும்பிவார்கள். சரும பிரச்சனைகளை குறைக்க உதவும் பல கிரீம்கள் சந்தைகளில் உள்ளன. ஆனால், அவை சரியான தீர்வை தருவதில்லை.

சரும பராமரிப்புக்கு ஃபேஸ் மாஸ்க் முக்கிய பங்கு வகுக்கிறது. அதிலும், சார்கோல் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை கொடுக்கிறது. முகப்பரு பிரச்சனையில் தொடங்கி சொரியாசிஸ் வரை பல சரும பிரச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது. அதுமட்டும் அல்ல, பற்களையும் வெள்ளையாக்க உதவுகிறது. சார்கோல் வைத்து வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி எனவும் அதன் நன்மைகளை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

ஆக்டிவேட்டர் சார்க்கோல் - 1 டீஸ்பூன்.

புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1.

ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்பூன்.

பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் - 1 சொட்டு.

ஃபேஸ் மாஸ்க் செய்முறை :

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்.

இப்போது, அதில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், மற்றும் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது சார்கோல் ஃபேஸ் மாஸ்க் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் யூகத்தை சோப் கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும்.

Also Read | அக்குள் துர்நாற்றத்தை போக்க உதவும் டியோடரன்ட் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

பின்னர், உங்கள் முகத்தை ஈரம் இல்லாமல் துடைக்கவும். இப்போது முறையாக தயார் செய்யப்பட்ட ஃபேஸ் மாஸ்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும்.

முகம் உலர்ந்ததும், குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவவும். கழுவிய பின், உங்கள் சருமத்தில் மாய்ஸ்சரை தடவவும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்கள் :

சார்கோல் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தை பளிச்சிடும்.

முக சுருக்கங்களை நீக்கி உங்களை என்றும் இளமையாக வைக்கும். அத்துடன், முகப்பரு மற்றும் அலர்ஜி பிரச்ச்னைகளை போக்கும். ஆக்டிவேட்டர் சார்க்கோல், சருமம் மற்றும் முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்யும்.

கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்கிறது. கரும்புள்ளிகள், சொரியாசிஸ் போன்றவற்றை குணப்படுத்துகிறது. Anti Aging Properties இருப்பதால் சருமத்தை இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

First published:

Tags: Beauty Hacks, Beauty Tips, Dry skin, Skin Care