தலைமுடியை மென்மையாக்க வாழைபழக் கண்டிஷ்னர்! வீட்டிலேயே செய்ய டிப்ஸ்

வாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன.

தலைமுடியை மென்மையாக்க வாழைபழக் கண்டிஷ்னர்! வீட்டிலேயே செய்ய டிப்ஸ்
ஹேர் கண்டிஷ்னர்
  • News18
  • Last Updated: October 4, 2019, 10:27 PM IST
  • Share this:
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்புவது உறுதியான தலைமுடியைத்தான். தலைமுடி அழகுக்கு மட்டுமல்ல தோற்றத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இன்று தவறான வாழ்க்கை முறைப் பழக்கங்களால் தலைமுடி உதிர்தல் சாதாரணமாகிவிட்டது. அப்படி தலைமுடி உதிர்வதற்கு முக்கியமானவை காற்று மாசுபாடு, தலை முடி வேர்களின் வறட்சி, அழுக்கு மற்றும் தூசிகள்தான். இவை எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வுதான் கண்டிஷ்னர்.

கெமிக்கல் நிறைந்த கண்டிஷ்னர்களை வாங்குவதை விட வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வாழைப்பழத்தில் கண்டிஷ்னர் செய்வதால் அதில் கிடைக்கக் கூடிய வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் போன்றவை தலைமுடியை உறுதியாக்க உதவுகின்றன. சரி எப்படி செய்வதென்றுப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 3தேன் - 2 ஸ்பூன்

தேங்காய் பால் - 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பழத்தை மைய மசித்துக் கொள்ளுங்கள். பின் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கினால் கெட்டியான பதத்தில் வரும். அதுவே வாழைப்பழக் கண்டிஷ்னர்.

பயன்படுத்தும் முறை : தலையை ஷாம்பூ கொண்டு குளித்தபின், தயரித்து வைத்துள்ள கண்டிஷ்னரை அப்ளை செய்து நன்கு தேய்த்து தலையை அலசுங்கள்.

Also see:

First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading