முகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்... வீட்டிலேயே தயாரிக்கலாம்...!

ஆர்கானிக் முறையில் தயாரிப்பதால் சருமத்திற்கு ஆபத்து இல்லாதது.

news18
Updated: March 25, 2019, 8:56 PM IST
முகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்... வீட்டிலேயே தயாரிக்கலாம்...!
கற்றாழை ஜெல்
news18
Updated: March 25, 2019, 8:56 PM IST
கற்றாழை எந்தவித பராமரிப்புகளுமின்றி தானாக வளரக் கூடியது. ஆனால் அதன் பலன் என்பது அளப்பரியது. உடல் ஆரோக்கியம் தொடங்கி சரும ஆரோக்கியம் வரை காப்பதில் கற்றாழை சிறந்த பங்காற்றுகிறது.

இதனால்தான் மூலிகை மருத்துவர்கள் வீட்டில் கற்றாழை வளருங்கள் என அறிவுறுத்துகின்றனர். அப்படி உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் முக அழகைப் பராமரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கற்றாழை ஜெல் என கடைகளில் விற்பதை வாங்குவதைக் காட்டிலும் ஆர்கானிக் முறையில் வீட்டில் நீங்களே தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :

கற்றாழை இலை - 2

Loading...

வைட்டமின் C ஆயில் -500 மில்லி கிராம்
வைட்டமின் E ஆயில் - 400 மில்லி மீட்டர்

செய்முறை :

கற்றழைத் தோலை சீவி அதில் உள்ள சதைப் பகுதிகளை மேசைக் கரண்டி வைத்து மழித்து எடுங்கள்.

அந்த ஜெல்லை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் கெட்டியான பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள்.

அதோடு வைட்டமின் C மற்றும் வைட்டமின் E ஆயிலை குறிப்பிட்ட அளவில் ஊற்றி அதையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவே..! அழகை பளபளக்கச் செய்யும் கற்றாழை ஜெல் தயார்.

இதை ஃபிரிஜ்ஜில் வைத்து 1 அல்லது 2 மாதங்கள் பயன்படுத்தலாம்
First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...