கை மற்றும் கால் நகங்க ள், பாதங்களை பராமரிக்க மெனிக்யூர், பெடிக்யூர் செய்வது இயல்பு. உங்கள் நகங்கள் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க, மெனிக்யூர், பெடிக்யூர் செய்த பிறகு அவற்றை சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் நகங்களை சரியாக பராமரிக்க தவறினால் அவை வலுவிழந்து உடையக்கூடியதாக மாறும்.
மெனிக்யூர் - பெடிக்யூர் செய்த பின் உங்கள் நகங்கள் உலர போதுமான நேரம் கொடுக்காவிட்டால், உங்கள் நெயில் பாலிஷ் உரியவோ அல்லது வெடிக்கவோ தொடங்கலாம். பார்லரில் பயன்படுத்தும் கெமிக்கல்களை நீண்ட அப்படியே வைத்திருந்தால் எரிச்சல் உணர்வும் ஏற்படும். நல்ல ரிசல்டை பெற மெனிக்யூர் - பெடிக்யூர் செய்த பின் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:
வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைக்கவும்
உங்கள் நகத்திற்கு வர்ணம் (nail polish) பூசிய பிறகு, அதை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். இது உங்கள் நகங்களில் உலராமல் இருக்கும் அதிகப்படியான பாலிஷை அகற்ற உதவும். புதிதாக நெயில் பாலீஷ் போட்ட நகத்தில் குளிச்சியை நீங்கள் விரும்பவில்லை என்றால், வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு துணியை இட்டு அதில் ஊறவைக்கலாம்.
நகங்களை தேய்க்க நெயில் பிரஷ் பயன்படுத்தவும்
நகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்த பிறகு, ஒரு மென்மையான பிரஷ்யைப் பயன்படுத்தி தண்ணீரில் வைத்தபடியே நகங்களை மெதுவாக தேய்க்கவும். இப்படி செய்வதால், உங்கள் நெயில் பாலிஷின் அடியில் சிக்கியிருக்கும் அழுக்கு மற்றும் எண்ணெய்களை அகற்ற உதவும்.
நகத்தை நன்றாக உலர வைக்கவும்
ஸ்க்ரப் (scrub) செய்த பிறகு, மற்றொரு கோட் பாலிஷ் போடாவோ அல்லது கைகளை வெந்நீரில் வைக்க வேண்டாம். அவை வறண்டு போகாமல் இருக்க அவற்றை இயற்கையாக காற்றில் உலர விடுங்கள்.
லோஷன் / ஹேண்ட் கிரீம் மூலம் உங்கள் கைகளை மாய்ஸ்டரைசிங் செய்யவும்
நகத்தை ஊறவைத்து, ஸ்க்ரப் செய்த பிறகு, உங்கள் நகங்களையும் கைகளையும் ஹைட்ரேட்டிங் லோஷன் அல்லது ஹேண்ட் க்ரீம் மூலம் ஈரப்பதமாக்க (moisturize) வேண்டியது அவசியம். இவை உங்கள் கைகளை மென்மையாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவும்.
Also Read : செம்பருத்தி முதல் சூரியகாந்தி வரை.. முகத்தின் பளபளப்புக்கு கைகொடுக்கும் பூக்கள்!
நெயில் பாலிஷ் ரிமூவர் பேடைப் (nail polish remover pad) பயன்படுத்தி உங்கள் நகங்களில் உள்ள அதிகப்படியான பாலிஷை மெதுவாக அகற்றவும்.
உங்கள் நகங்களில் ஏதேனும் கூடுதல் பாலிஷ் இருந்தால், அதை மெதுவாக தேய்க்க நெயில் பாலிஷ் ரிமூவர் பேடைப் பயன்படுத்தவும். நகத்தில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால், அது உங்கள் நகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
ஐந்து நிமிடங்களுக்கு மேல் உங்கள் நகங்களை வெந்நீரில் ஊற வைக்காதீர்கள். அப்படி ஊறவைத்தால் நகங்கள் உலர்ந்து, நுனிகளில் உரிய ஆரம்பிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beauty Tips, Manicure, Pedicure