வீட்டில் அலுவலகப் பணி : வீடியோ கால் பேசும்போது அழகாக இருக்க இந்த விஷயங்களைச் செய்யுங்கள்..!
உயர் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களுடனான உறவை பலப்படுத்தவும், மீட்டிங் போன்ற விஷயங்களை வீடியோ கால் மூலம் செய்துவருகின்றனர்.

வீடியோ கால்
- News18 Tamil
- Last Updated: April 13, 2020, 12:35 PM IST
லாக்டவுனால் பலரும் வீட்டில் அலுவலகப் பணி செய்து வருகின்றனர். இதனால் உயர் அதிகாரிகள் தங்கள் ஊழியர்களுடனான உறவை பலப்படுத்தவும், மீட்டிங் போன்ற விஷயங்களை வீடியோ கால் மூலம் செய்துவருகின்றனர். அப்படி வீடியோ கால் செய்யும்போது நீங்கள் அழகாக இருக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்.
இயற்கை வெளிச்சம் : வீட்டில் உள்ள மின் விளக்குகளைக் காட்டிலும் இயற்கை வெளிச்சம்தான் உங்களை அழகைப் பளிச்சென காட்டும். எனவே பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு வீடியோ கால் பேசவும்.
ஃபில்டர் : சில நேரங்களில் டச்அப் செய்ய முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் அந்த ஆப்பில் ஃபில்டர் அம்சம் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். ஸூம் மீட்டிங்கில் இந்த ஆப்ஷன் இருக்கும். நொடியில் பளிச் : தூங்கி எழுந்ததும் மீட்டிங் அல்லது வீட்டிலேயே இருப்பது சோர்வாக முகத் தோற்றத்தை அளித்தால் உடனே சில ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்தால் முகம் உப்பி பளிச்சென தோன்றும்.
மேக்அப் : தினசரி மேக்அப்பில் பேஸ் மேக்அப் மட்டும் அப்ளை செய்யலாம். அதாவது மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து பேச் ஃபவுஜ்டேஷன் மட்டும் அப்ளை செய்யலாம்.
ஐ மேக்அப் : கண்கள் சோர்வாக இருந்தால் கண் மை, மஸ்காரா அப்ளை செய்யுங்கள். முடிந்தால் லைட் ஷிம்மரி ஷேட் நிறத்தை கண்களில் அப்ளை செய்யுங்கள்.
பிளஷ் : முடிந்தால் பிரைட் குளோ அழகு கிடைக்க பிளஷ் செய்யலாம்.
லிப் மேக்அப் : உதட்டிற்கு பிரைட் அல்லாமல் சற்று நியூட் நிற ஷேடில் லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள். மாய்ஸ்சரைட்சர் அப்ளைச் செய்து லிப்ஸ்டிக் மட்டும் அப்ளை செய்தாலே அழகு கூடும்.
ஹேர் ஸ்டைல் : தலையை வாரி ஃபிரீ ஹேர் அல்லது ஹை பன் போட்டுக்கொள்வதும் அருமையாக இருக்கும்.
பார்க்க :
இயற்கை வெளிச்சம் : வீட்டில் உள்ள மின் விளக்குகளைக் காட்டிலும் இயற்கை வெளிச்சம்தான் உங்களை அழகைப் பளிச்சென காட்டும். எனவே பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் கதவுகளை திறந்துவிட்டு வீடியோ கால் பேசவும்.
ஃபில்டர் : சில நேரங்களில் டச்அப் செய்ய முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் அந்த ஆப்பில் ஃபில்டர் அம்சம் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். ஸூம் மீட்டிங்கில் இந்த ஆப்ஷன் இருக்கும்.