உங்கள் ’ஸ்கின் டைப்’ என்ன..? கண்டறிய சிம்பிள் டிப்ஸ்..!

நீங்க என்ன ஸ்கின் டைப்.?

Web Desk | news18
Updated: August 10, 2019, 9:37 AM IST
உங்கள் ’ஸ்கின் டைப்’ என்ன..? கண்டறிய சிம்பிள் டிப்ஸ்..!
’ஸ்கின் டைப்’
Web Desk | news18
Updated: August 10, 2019, 9:37 AM IST
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அதுதான் நம் அழகு பராமரிப்பையும் தீர்மானிக்கிறது. அதை சரியாகத் தெரிந்து கொண்டால்தான் அழகுக் குறிப்பு முதல் காஸ்மெடிக்ஸ் வரை பலன் தரும்.

இல்லையெனில் சர்க்கரைப் பொங்கலுக்கு உப்பு போட்ட மாதிரிதான் உங்கள் சருமமும் தோற்றமளிக்கும். அப்படி உங்களுடையது என்ன சருமம் என சரியாக உங்களுக்குத் தெரியுமா..இல்லையெனில் இனி தெரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக இந்தியர்களுக்கு நான்கு வகையான சரும வகைகள் இருக்கின்றன. அவை, நார்மல் சருமம், எண்ணெய் சருமம், வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் மற்றும் வறட்சி கலந்த காம்பினேஷன் சருமம்.அதேபோல் சரும வகையைக் கண்டுபிடிப்பதில் பலருக்கும் காம்பினேஷன் மற்றும் ஆயில் சருமம் இரண்டில் எது என் சருமம் என்பது குழப்பமாகவே இருக்கும். அதையும் இந்தக் குறிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

சரி இதில் நீங்கள் எந்த வகை என்பதை சோதித்துப் பார்க்கலாம்.

முதலில் மேக் அப் , கிரீம் அப்ளை செய்திருந்தால் அவற்றை முற்றிலும் நீக்கிவிட்டு , குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். பின் ஒரு மணி நேரம் முகத்திற்கு எதுவுமே அப்ளை செய்யாமல் காற்றாட விடுங்கள். இதனால் சருமம் ஸ்வாசம் பெறும். ஒரு மணி நேரம் கழித்து கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் பளிச்சென ஃபிரெஷாகத் தோன்றினால் உங்களுடையது நார்மல் ஸ்கின் அல்லது சமநிலைச் சருமம்.

பளபளப்பாக , பிசிபிசுப்பென எண்ணெய் வடிவது போல் தோன்றினால் அது எண்ணெய்ச் சருமம்.

நெற்றி, மூக்கு, தாடை ஆகிய பகுதிகளிலிருந்து மட்டும் எண்ணெய் வடிந்து மற்ற பகுதிகள் நார்மலாக அல்லது வறண்டு இருந்தால் காம்பினேஷன் சருமம்

மிகவும் வறண்டு, கரடு முரடாக (rough), சோர்வாக , வறட்சியாக உணர்ந்தால் உங்களுக்கு ஈரப்பதம் தேவைப்படும் உணர்வு தோன்றினால் உங்களுடையது வறண்ட சருமம்.

பார்க்க :

நேர்கொண்ட பார்வை விமர்சனப் பார்வை

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...