• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழைக்காலத்தில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா..? இந்த பராமரிப்பு வழிகளை செய்து பாருங்கள்

மழைக்காலத்தில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறதா..? இந்த பராமரிப்பு வழிகளை செய்து பாருங்கள்

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வு

தலை முடி பிரச்சினைக்கு முதன்மையான காரணம் வயது மற்றும் மரபியல் காரணிகள் ஆகும். இவற்றினை நாம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.

  • Share this:
இன்றைய காலத்தில் தலைமுடியை பராமரிப்பது பெரும்பாடாக பலருக்கும் உள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் முடி கொட்டுவது, பொடுகு, நரை என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் சருமத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தலைமுடிக்கும் கொடுக்க வேண்டும். குறிப்பாக முடியை ஈரப்பதமாக வைத்திருத்தல் அவசியம். அது வறண்டு போகும் போது, முடி உதிர்தல் ஏற்பட தொடங்குகிறது. தலைமுடியை பராமரிப்பது குறித்து இங்கு காண்போம்.

நமது கூந்தல் வலிமை பெறுவதற்காக பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அவை சரியான பொருட்களா என்று நாம் ஆராய்வதில்லை. அமினோ அமிலங்கள், சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட புரதங்கள், ஆலிவ், செராமைடு,ஹைலூரோனிக் அமிலம், வைட்டமின்கள் பி 3, பி 5 மற்றும் பி 6 நிறைந்த ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்த ஹேர் கேர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். உங்கள் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக கெமிக்கல் நிறைத்தவற்றை தவிர்த்து விடுங்கள்.

இதுதவிர தலை முடி பிரச்சினைக்கு முதன்மையான காரணம் வயது மற்றும் மரபியல் காரணிகள் ஆகும். இவற்றினை நாம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும். சரியான ஊட்டச்சத்துள்ள சமச்சீர் உணவை நாம் உட்கொள்ளும் போது முடியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
ஒமேகா 3 நிறைந்துள்ள உணவு பொருட்கள், புரோபயாடிக்குகள், எதிர்ப்பு- ஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட், இரும்பு, வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நெல்லிக்காய், கருவேப்பிலை, ஆரஞ்சு போன்றவை கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.சீப்பு மட்டும் போதும் :

தலை முடியை அடிக்கடி ஹேர் ட்ரையர் வைத்து பயன்படுத்தக் கூடாது. முடியின் இயற்கையான வேர் கால்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. முடியை வெப்பப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இது போன்ற கருவிகள் முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன. சீப்பு பயன்படுத்துவது தலை முடிக்கு சிறந்தது ஆகும்.

கருவளையம் ஏன் வருகிறது தெரியுமா..? சரி செய்யும் வீட்டுக் குறிப்புகள்...

இயற்கையே சிறந்தது :

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் இயற்கையான பொருட்கள் அடங்கி இருப்பது அவசியம். இதேபோல வாரம் இரண்டு முறை கற்றாழை, தயிர், வெந்தயம், முட்டை வெள்ளை கரு இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து உங்கள் கூந்தலில் ஹேர் பேக் போடலாம். இது தலை முடிக்கு தேவையான ஊட்டசத்தையும், ஈரப்பதத்தையும் அளிக்கிறது.ஆரோக்கியமான கூந்தல் :

கூந்தலின் கூடுதல் ஈரப்பதத்திற்கு ஹைட்ரேட்டிங் ஹேர் மாஸ்க்கினை பயன்படுத்தி பார்க்கலாம் இதன் மூலம் சேதமடைந்த முடி விரைவில் மாறிவிடும். இதை வாரம் 1 முறை செய்து பார்க்கலாம். சுமார் 3 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த பேக்கை போட்டுவிட்டு பின்னர் ஷாம்பூ கொண்டு வாஷ் செய்து விடுங்கள். இதனால் தலைமுடியானது அதிக அளவில் ஈரப்பதத்தை பெறும்.

மேலும் உங்கள் கூந்தலுக்கு அவோகேடோ, ரோஸ்மேரி, குங்குமப்பூ, பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். இந்த பொருட்களை எல்லாம் கலந்து உச்சந்தலையில் வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால், தலைமுடியானது நீளமாக வளரும். மேற்கண்ட இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தினால் தலைமுடி ஈரப்பதத்துடனும், நீண்ட ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: