Home /News /lifestyle /

கோடை காலத்தில் வியர்வை, துர்நாற்றத்தை சமாளிக்க சில ஸ்மார்ட் ஆன யோசனைகள்!

கோடை காலத்தில் வியர்வை, துர்நாற்றத்தை சமாளிக்க சில ஸ்மார்ட் ஆன யோசனைகள்!

கோடை காலத்தில் வியர்வை

கோடை காலத்தில் வியர்வை

நீங்கள் உஷ்ணமாக உணரும் போதெல்லாம் ​​உங்களுக்கு அதிகமாக வியர்க்கும். அது உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாவுடன் சேர்ந்து, உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

இயற்கையாக உருவாகும் அனைத்துமே நமக்கு பிடித்து விடுவதில்லை. அதற்கு ஆகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு தான் - வியர்வை. குறைந்தபட்சம் நடைப்பயிற்சி தொடங்கி அதிகபட்சம் ஸ்டீம் பாத் வரை உடலில் வியர்வையை வரவழைக்க பலரும் பல வகையான முயற்சிகளை செய்வதால், வியர்வை நமக்கெல்லாம் பிடித்த ஒரு விடயமாகி விடாது.

ஏனெனில் ஒருவரின் உடல் துர்நாற்றத்திற்கு ஆதி காரணமே வியர்வை தான். நீங்கள் உஷ்ணமாக உணரும் போதெல்லாம் ​​உங்களுக்கு அதிகமாக வியர்க்கும். அது உங்கள் உடலில் உள்ள பாக்டீரியாவுடன் சேர்ந்து, உடல் துர்நாற்றத்தை உண்டாக்கும். இந்த இடத்தில் தான் - வியர்வையின் வெளியேற்றம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவிற்கு வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தைப் போக்குவதும் முக்கியமே! அதெப்படி?

வாசனை திரவியம் அல்லது டியோடரண்ட்டை சரியாக தேர்வு செய்யவும்!

சிட்ரஸ், வாட்டரி ஃப்ளோரால்ஸ் மற்றும் க்ரீன் ஃப்ரூட்ஸ் ஃப்ளேவர்ஸ் போன்ற குளிர்ச்சியான வாசனை திரவியம் அல்லது டியோடரண்டை பயன்படுத்தவும். இந்த நறுமணங்கள் உங்களை ஃப்ரெஷ் ஆக உணர வைக்கும் மற்றும் நாள் முழுவதும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.



காலணிகளை சுத்தம் செய்வதும், காலுறைகளை அணிவதும் அவசியம்!

நீங்கள் சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவராக இருந்தால், அதை உடனே நிறுத்துங்கள்! ஏனெனில் இது தேவையற்ற கால் நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே சாக்ஸ் அல்லது ஷூ லைனர்களை அணிய மறக்க வேண்டாம். மேலும் அவ்வப்போது உங்கள் காலணிகளுக்குள் சிறிது பேக்கிங் சோடா அல்லது பேபி பவுடரை தெளிப்பதன் மூலம் காலணிகளுக்குள்ளான துர்நாற்றத்தையும் நீக்கவும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா - இந்த 10 நிமிட வொர்கவுட் செய்யுங்க

வாசனை திரவியத்தை குளிரூட்டவும்!

ஒரு குறிப்பிட்ட வாசனை திரவியத்தின் வாசனை நீண்ட காலம் நீடிக்க உதவும் ஒரு தந்திரம் உள்ளது - அந்த வாசனை திரவியத்தை குளிரூட்டுவதே ஆகும். இது நறுமணத்தின் சக்தியையும் தரத்தையும் பாதுகாத்து அதை நீண்ட நேரம் தக்க வைக்கும்.

உங்கள் உடலில் வாசனைகளை 'லேயர்டு' செய்வதன் வழியாகவும் அதை அதிக நேரம் நீடிக்க வைக்கலாம். அதாவது குளிக்கையில் வாசனை மிக்க பாடி வாஷை பயன்படுத்த வேண்டும், பிறகு அதே மாதிரியான வாசனையை கொண்ட பாடி லோஷன் மற்றும் பாடி மிஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.



தலைமுடிக்கும் நறுமணம் தேவை!

வியர்வை உங்கள் சருமத்தில் ஒட்டிக்கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடியையும் பாதிக்கிறது. எனவே தான் அக்குள், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் வாசனைகள் தலைமுடிக்கும் சிறிது தேவைப்படுகிறது. முடி இழைகளில் சிறிது வாசனை திரவியத்தை மெதுவாகத் தெளிக்கவும், பின்னர் குறிப்பிட்ட நறுமணம் பரவ உங்கள் தலைமுடியை லேசாக கலைத்து சரி செய்யவும்.

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

எங்கும், எப்போதும் ட்ரை டியோடரண்ட் மற்றும் பேபி வைப்ஸ்களை உடன் எடுத்து செல்லுங்கள்!

சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக வியர்க்கும். இதன் விளைவாக அவர்களின் உடல் துர்நாற்றமும் அதிகரிக்கும் இதில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கைவசம் எப்போதுமே ட்ரை டியோடரன்ட் மற்றும் சில பேபி வைப்களை எடுத்து செல்லுங்கள். எப்போதெல்லாம் வியர்வை மற்றும் துர்நாற்றம் வீசுவதை உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் வியர்வை அதிகம் உள்ள இடங்களை பேபி வைப்களை கொண்டு சுத்தம் செய்து, பின் ட்ரை டியோடரண்ட்டை தெளிக்கவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Summer tips, Sweating

அடுத்த செய்தி