புருவங்கள் அடர்த்தியாக வளர வேண்டுமா... இதை டிரை பன்னுங்க..!

முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமெனில் புருவங்களில் மசாஜ் செய்து நரம்புகளைத் தூண்ட வேண்டும்.

புருவங்கள் அடர்த்தியாக வளர வேண்டுமா... இதை டிரை பன்னுங்க..!
அடர்த்தியான புருவங்கள்..!
  • News18
  • Last Updated: July 13, 2019, 7:29 PM IST
  • Share this:
பெண்களுக்கு அழகு புருவங்கள்தான். குறிப்பாக 90 களில் டிரெண்டான முதல் பியூட்டி விஷயம் என்னவெனில் புருவங்களை ட்ரிம் செய்து அழகு படுத்துவதுதான்.

புருவங்களை மெருகேற்றும்போது அது முகத்திற்கு கூடுதல் பொலிவையும் இளமையையும் அளிக்கும். புருவங்களை மெருகேற்ற வேண்டுமெனில் முடி அடர்த்தியாக வளர வேண்டும். என்னதான் செயற்கையாக பென்சிலில் புருவங்கள் வரைந்து அழகு செய்தாலும் அதில் அத்தனை அழகு மிளிராது. எனவே வீட்டிலேயே புருவங்கள் அடர்த்தியாக வளர என்ன செய்யலாம் என்று ஆலோசனை வழங்குகிறது இந்தக் கட்டுரை.
மசாஜ் செய்யுங்கள் : முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமெனில் புருவங்களில் மசாஜ் செய்து நரம்புகளைத் தூண்ட வேண்டும். அதற்கு உங்கள் பிரெஷ் பயன்படுத்தி வலது புறத்திலிருந்து இடது புறமாக சுழற்றுவது போல் மசாஜ் செய்யுங்கள்.

எண்ணெய் தேய்க்கலாம் : ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் பெட்ரோலியம் ஜெல் கூட பயன்படுத்தலாம். புருவங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்த்து வாருங்கள். நன்கு வளரும்.

திரெட்டிங் செய்யாதீர்கள் : சுத்தமாக முடியே வளரவில்லை எனில் திரெட்டிங் செய்வதை குறைந்தது 12 வாரங்கள் நிறுத்தி வையுங்கள். தினம் தினம் தலை வாறும்போது சீப்பு கொண்டு புருவத்தையும் வாறுங்கள். அப்போது வளர்ச்சி தூண்டப்பட்டு நன்கு வளரும். அதன்பிறகு திரெட்டிங் செய்தால் நல்ல ஷேப் கிடைக்கும். அடர்த்தியாகவும் இருக்கும்.
First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்