புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ் இதோ..

காட்சி படம்

உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ் இதோ..

 • Share this:
  உங்கள் புருவங்களுக்கு  உங்கள் முகத்தை வடிவமைக்கும் திறன் உள்ளது. உங்கள் புருவத்தில் நீங்கள் ஏதேனும் தவறான மாற்றத்தை மேற்கொள்ளும் போது அது முக அழகை முற்றிலும் மாற்றிவிடும். இதனால் மீண்டும் உங்கள் புருவத்தில் மாற்றங்களையும் செய்ய நீங்கள் 2-3 வாரங்களாவது காத்திருக்க வேண்டும். அழகிய புருவம் கொண்ட பெண்களின் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும்.

  மேலும், பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில உதவிக்குறிப்புகளை காண்போம்.

  1. புருவத்தை ட்வீஸ் செய்யும் போது இரண்டு கண்ணாடியைப் பயன்படுத்துங்கள்

  புருவங்களை வடிவமைக்க அவற்றில் உள்ள முடிகளை அகற்றும் போது இரண்டு கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். முடிகளை அகற்றுவதற்கு உதவும் வகையில் ஒன்றும், புருவங்கள் சரியான வடிவத்தில் வருகின்றனவா என்பதை சரிபார்க்க மற்றொரு பெரிய கண்ணாடியை பயன்படுத்தலாம். இது புருவ முடிகளை அகற்றும் பொது நிச்சயமாக உங்கள் புருவங்களின் வடிவங்களை ஒரே மாதிரியாக பெற உங்களுக்கு உதவும்.

  2. தினமும் ஒரு சில புருவ முடிகளை மட்டும் நீங்குங்கள்

  ஒரே நாளில் உங்கள் புருவங்களை வடிவமைப்பதில் ஈடுபட வேண்டாம். அழகு நிலையங்களில் மீண்டும் புருவ முடிகளை அகற்ற செல்லும் வரை உங்கள் புருவங்களைத் தொடக்கூடாது. ஆனால் அதை நீங்களே வீட்டில் செய்ய வேண்டியிருந்தால், ஒரு நாளில் ஒரு சில முடிகளை மட்டும் எடுக்கவும். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அகற்ற முயற்சிக்காதீர்கள். இந்த வழியை பின்பற்றினால் உங்களுக்கு பிடித்த வடிவத்தை எளிதில் பெறலாம். குறிப்பாக வீட்டிலேயே புருவ முடிகளை உங்களுக்கு அகற்ற தெரியும் என்றால் நீங்கள் இதை செய்யலாம்.

  3. புருவத்தின் கீழ் பகுதியில் உள்ள முடிகளை மட்டும் அகற்றுங்கள்  உங்கள் புருவ வடிவத்தை சிதைக்கக்கூடும் என்பதால், எப்போதும் புருவங்களின் மேல் பகுதியில் இருந்து முடியை அகற்ற வேண்டாம். சிறிய பிரஷ் மூலம் உங்கள் புருவங்களை நன்றாக கோதி விட்டு, அவற்றின் இயற்கையான வடிவத்தில் ஏதேனும் புது முடி வளர்கிறதா என்று பாருங்கள். அப்படி வளர்ந்திருந்தால் அவற்றை மட்டும் அகற்றுங்கள். வேறு எந்த முடிகளிலும் கை வைக்காதீர்கள்.

  Also Read : வெள்ளை நிற சுடிதார் , சிம்பிள் மேக்அப்… அசத்தும் ரகுல் ப்ரீத் சிங் : நீங்களும் டிரை பண்ணி பாருங்க...

  4. புருவங்களை கவனமாக ட்ரிம் செய்யுங்கள்

  உங்கள் புருவங்களை ட்ரிம் செய்வதால் அவற்றின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ட்ரிம் செய்ய உங்களுக்கு ஒரு ஸ்பூலி ப்ரஷ் மற்றும் சில நேரான கத்தரிக்கோல் தேவை. எல்லா முடிகளையும் கோதி, உங்கள் புருவ வடிவத்திற்கு அப்பால் வளர்ந்து நிற்கும் எந்த ஒரு முடிகளையும் நீங்கள் ட்ரிம் செய்யலாம்.  புருவ முடிகளை அடர்த்தியாக பெற சில எளிய வழிகள்:

  * புருவங்களின் முடி வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தடவலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

  * எண்ணெய் தடவுவதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது.

  * தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது.

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: