Home /News /lifestyle /

அடர்த்தியான கூந்தலை பெற உதவும் இயற்கை ஷாம்பு… வீட்டிலேயே தயாரிக்கலாம்..

அடர்த்தியான கூந்தலை பெற உதவும் இயற்கை ஷாம்பு… வீட்டிலேயே தயாரிக்கலாம்..

காட்சி படம்

காட்சி படம்

Home Made Shampoo Tips | இயற்கை முறைகளான சீயக்காய், ரீத்தா, ஆம்லா போன்ற கலவைகள் ஷாம்புகளை போல அதிக நுரையை வழங்காது.

சில தசாப்தங்களுக்கு முன் கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று கடைகளில் வகை வகையான ஷாம்பூக்கள் எதுவும் விற்கப்பட்டது இல்லை. ஏனென்றால் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் வாரா வாரம் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் தேங்காய் அல்லது நல்லெண்ணெயை தலைமுடிக்கு தேய்த்து. சிறிது நேரம் ஊற வைத்து சீயக்காய் மற்றும் ரீத்தா பவுடர் போன்றவற்றின் வேக வைத்த கலவை கொண்டு தலைக்கு குளித்தார்கள்.

இந்த இயற்கை முறை நல்ல கூந்தல் ஆரோக்கியத்தை அக்கால பெண்களுக்கு அளித்தது. மேலும் ஷாம்புவை வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை முறையாக இருந்தது. அப்போதெல்லாம் பெண்களின் முடி முன்கூட்டியே வெள்ளையாக மாறவில்லை. மேலும் பளபளப்பாகவும் இருந்தது.

ஆனால் இதற்கு நேர்மாறாக தற்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான முடி தயாரிப்புகளில் நச்சு ரசாயனங்கள் நிரம்பியுள்ளன. இவற்றை பயன்படுத்தும் போது நீங்கள் பட்டுப் போன்ற மென்மையான தலைமுடியை பெற்றாலும் கூட புற்றுநோய் முதல் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு வரை அவை நீண்டகால மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

முடியை எதை கொண்டு பராமரிப்பது.?

இயற்கை முறைகளான சீயக்காய், ரீத்தா, ஆம்லா போன்ற கலவைகள் ஷாம்புகளை போல அதிக நுரையை வழங்காது. ஆனால் நிச்சயமாக உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கிய விருப்பமாக இருக்கும்.



ஆம்லா:

ஆம்லா என்று அழைக்கப்படும் நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது முடிக்கு கருப்பு நிறத்தை கொடுக்கிறது. நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சேதமடைந்த முடி மற்றும் செல்களை சரிசெய்து முடியை மேலும் சேதமடையாமல் பாதுகாக்கிறது.



ரீத்தா அல்லது சோப்நட்:

இதில் இரும்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பியுள்ளது, இது உங்கள் தலைமுடியை சேதத்திற்கு எதிராக பலப்படுத்துகிறது மற்றும் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

also read : லாக்டவுன் காலத்தில் உங்கள் முகத்துக்கு ‘நோ மேக்கப்’ லுக் கொண்டு வருவது எப்படி?

சீயக்காய்:

உங்கள் உச்சந்தலையில் நன்மை பயக்கும் ஏராளமான வைட்டமின் சி கொண்ட உலர்ந்த காய்களை கொண்டு சீயக்காய் தயாரிக்கப்படுகிறது. இயற்கையாகவே pH மதிப்பை குறைத்து, முடியின் இயற்கையான எண்ணெய்களை தக்கவைத்து, அவற்றை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது சீயக்காய்.



வீட்டிலேயே சீயக்காய் வாஷ் தயாரிப்பது எப்படி.?

* ரீட்டா விதைகள், சீயக்காய் காய்கள் மற்றும் உலர்ந்த நெல்லி உள்ளிட்டவற்றை வாங்கவும்.

* ஒரு கைப்பிடி ரீத்தா விதைகள், சுமார் 8-10 சீயக்காய் காய்கள் மற்றும் ஒரு கைப்பிடி நெல்லிக்காய் துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள்.

* இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.



also read : கண்களுக்கு கீழே உருவாகும் கருவளையம் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் தடுக்க அவசியம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

* இந்த கலவையை காலையில் கொதிக்க வைக்கவும்.

* பின் கலவையை நன்கு ஆறவைத்து அதை பிளெண்டரில் கலக்கவும்.

* கலவையை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

* இப்போது இந்த திரவ கலவையை நீங்கள் ஷாம்புவாக பயன்படுத்தலாம்.

* இந்த ஷாம்பு சிறப்பான பலன்களை தர பயன்படுத்துவதற்கு முன் லேசாக சூடாக்கி பின்னர் பயன்படுத்தலாம்.

* அதே போல இந்த இயற்கை ஷாம்பூவை கொண்டு ஹேர் வாஷ் செய்த பிறகு உங்கள் தலைமுடியை கண்டிஷனிங் செய்ய தேவையில்லை.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Hair care

அடுத்த செய்தி