திருமணம், பார்ட்டி என வெளியே செல்லும் போது டல்லான முகத்தை பளிச்சிட வைக்க இந்த வீட்டுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
பப்பாளி ஃபேஸ் பேக் : 1/4 கப் பப்பாளி, 1/2 ஸ்பூன் சந்தனம் மற்றும் கற்றாழை, ரோஸ் வாட்டர் என நான்கையும் மைய கலந்துகொண்டு முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் தெளிவாகும்.
ஓட்ஸ் ஃபேஸ் பேக் : ஓட்ஸ் 2 ஸ்பூன், சந்தனம் 1 ஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் எனக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.
தக்காளி ஃபேஸ் பேக் : 1 தக்காளி, சர்க்கரை 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். தக்காளியை மசித்து சர்க்கரை சேர்த்து கலந்து முகம், கழுத்து என அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
வெள்ளரி ஃபேஸ் பேக் : 1/2 வெள்ளரி, 1 ஸ்பூன் கற்றாழை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் மைய மசித்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவ முகம் ஜொலிக்கும்.
வாழைப்பழம் ஃபேஸ் பேக் : வாழைப்பழத்தை மைய மசித்து அதில் விட்டமின் இ எண்ணெய்யை ஊற்றி நன்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவுங்கள். வறண்ட சருமத்தினர் இந்த பேக்கை அப்ளை செய்ய சருமம் மென்மையாகும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.