• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பார்லர் செல்ல முடியவில்லையா..? வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற இவற்றை செய்யுங்கள்..!

பார்லர் செல்ல முடியவில்லையா..? வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தைப் பெற இவற்றை செய்யுங்கள்..!

அடுத்ததாக கடலை மாவு , கொஞ்சம் மஞ்சள் பால் கலந்து பேஸ்ட் போல் கலந்து ஃபேஸ் கிரீம் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

அடுத்ததாக கடலை மாவு , கொஞ்சம் மஞ்சள் பால் கலந்து பேஸ்ட் போல் கலந்து ஃபேஸ் கிரீம் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

இந்த விஷயங்களை பின்பற்றினால் ஸ்பா அனுபவத்தை அப்படியே பெறலாம்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே ஸ்பா அனுபவத்தை பெற இந்த விஷயங்களை பின்பற்றுங்கள். ஸ்பா அனுபவத்தை அப்படியே பெறலாம்.

    முதலில் தேவை ரிலாக்ஸ் : முதலில் உங்களை ரிலாக்ஸ் மூடிற்கு தயாராக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு பிடித்த மெல்லிய இசையைக் கேட்கலாம். சிறந்த நறுமணமும் உங்களை ரிலாக்ஸாக்கும். அதற்கு மல்லிகை, லாவண்டர், லெமன், ஆல்மண்ட் போன்ற வாசனை திரவியங்களை அறையில் பயன்படுத்தலாம்.

    பேசியல் ஸ்டீம் : அடுத்ததாக முகத்தில் உள்ள சருமத்தை உயிர்பிக்க ஸ்டீமிங் செய்து கொள்வது நல்லது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி தோல் விரிவடைகிறது. பேசியல் செய்யும் போது கிரீம் எளிதாக வேர் வரை சென்று செயல்பட உதவுகிறது.

    உடல் மற்றும் முகம் மென்மையாக : முகம் மற்றும் உடலை ஸ்க்ரப் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்குகிறது. இதனால் ரத்த ஓட்டமும் சீராகி உடல் ரிலாக்ஸாகும்.

    தலைமுடிக்கு மாஸ்க் : உடல் மட்டுமின்றி தலையிலும் மாஸ்க் அணிந்து கொள்வதால் அதிகமான ரிலாக்ஸை உணர முடியும். எனவே ஹேர் மாஸ்குகள் பயன்படுத்தி தலைக்கு புத்துணர்வு அளியுங்கள்.



    மாஸ்க் அணிந்து பொலிவை மீட்டெடுக்கலாம் : முகம் பொலிவு பெற பேஸியல் மாஸ்க் மிகவும் அவசியமானது. இதனால் முகப்பருக்கள் மறைந்து கரும்புள்ளிகள் அற்று முகத்தை தெளிவுபடுத்துகிறது.

    மின்னும் கை கால்கள் : பொலிவான கால்கள் மற்றும் விரல்களைப் பெற சுடு நீரில் கை மற்றும் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை, கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவு கிடைக்கும்.

    சிறந்த புத்துணர்வை அளிக்கும் குளியல் : குளியல்தான் பர்பெக்ட் ரிலாக்ஸுக்கு வழி வகுக்கும். அதிக நேரம் குளிப்பதினால் சிறந்த புத்துணர்வை பெற முடியும். அதற்காக ஷவரில் வாசனை நிறைந்த ஜெல் கலந்து குளிப்பது சிறப்பானது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: