• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆண்களே... பொடுகுத் தொல்லையால் அவஸ்தையா..? இந்த 6 எளிய வழிகளை பின்பற்றலாம்..!

ஆண்களே... பொடுகுத் தொல்லையால் அவஸ்தையா..? இந்த 6 எளிய வழிகளை பின்பற்றலாம்..!

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

சைனஸ், நீர்கோர்ப்பு உள்ளிட்ட பிரச்ச்சனைகள் இருப்பின் இக்குறிப்புகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றலாம்.

  • Share this:
    வறண்ட தலைமுடி வேர்களின் பக்குகள் பிரிந்து வருவதே பொடுகு. இது ஈரப்பதமின்மை, தொற்று , அழுக்கு போன்ற காரணங்களால் உண்டாகலாம். பொடுகுத்தொல்லை ஒழிய இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

    எலுமிச்சை : எலுமிச்சையை தோலோடு சாறு பிழிந்து வேர்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடங்கள் ஊற வைத்து தலைக்குக் குளியுங்கள்.

    தேன் : தேனில் கொஞ்சம் பூண்டுகளை தட்டிப் போட்டு ஊற வைத்து அதை வேர்களில் தடவி தலைக்குக் குளித்தால் பலன் கிடைக்கும்.

    தேயிலை எண்ணெய் : தேயிலை எண்ணெயும் பொடுகை நீக்க உதவும். தேயிலை எண்ணெயில் மசாஜ் செய்து ஊற வைத்துக் குளியுங்கள்.

    Work from home : நாள் முழுவதும் அடுத்தடுத்த மீட்டிங் உங்கள் மனநிலையை பாதிக்கிறதா..? இந்த 7 வழிகளைப் பின்பற்றுங்கள்..!



    தயிர் : தயிருடன், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோட மற்றும் கசக்கிய புதினா இலைகளை போட்டு நன்குக் கலந்து அந்த பேஸ்டை வேர்களில் மாஸ்க் போல் தடவி 15 நிமிடங்கள் காய வைத்து தலைக்குக் குளியுங்கள்.

    சின்ன வெங்காயம் : சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

    நீங்க சரியான நபரைத்தான் திருமணம் செய்துள்ளீர்களா..? தெரிஞ்சுக்க இதை படிங்க...!

    கற்றாழை : கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்கலாம்.

    குறிப்பு : நீர் கோர்த்தல், சைனஸ், தைராய்டு போன்ற பிரச்னைகள் இருப்போர் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் இவற்றைச் செய்யவேண்டும். அதேபோல் மேலே குறிப்பிட்ட குறிப்புகளை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வர பலன் தெரியும்.

    பார்க்க : 

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: