உடலின் மற்ற பகுதிகளைப் போலவே நம்முடைய நகங்களும் நமது உள் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. நகங்களை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க அவற்றை பராமரிப்பது அவசியம். ஏனென்றால் ஆரோக்கியமான நகங்கள் நம்மை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பிரதிபலிப்பவை.
நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காசை அதிகம் செலவழித்து மெடிக்யூர் அல்லது பெடிக்யூர் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. வீட்டிலேயே சில எளிய பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றி நகங்களை ஆரோக்கியமாக வைக்கலாம். நகங்களை வலுவாக வைக்க ஆரோக்கிய உணவுகள், தொடர் பராமரிப்பு உள்ளிட்டவை உதவுகின்றன. தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவுவது நகங்களை எளிதில் உடைய கூடியதாக மாற்றுகிறது. தவிர தீங்கு விளைவிக்கும் வாஷிங் டிட்டர்ஜென்ட் அல்லது சோப்புகள் பயன்படுத்துவது கூட நகங்களை மிகவும் உடைய கூடியதாக்கும். அதே போல ஊட்டச்சத்து மிக்க ஆகாரங்கள் எடுத்து கொள்ளாமல் இருப்பதாலும் பலவீனமான நகங்கள் ஒருவருக்கு இருக்க கூடும்.
நகங்களை வலுவாக வைத்திருக்க உதவும் எளிய வீட்டு பராமரிப்பு குறிப்புகள் கீழே:
கிளவுஸ்களை பயன்படுத்துங்கள்:
நம் நகங்களை அடிக்கடி தண்ணீருக்கு வெளிப்படுத்துவது அல்லது அடிக்கடி நகங்களை கழுவுவது, தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்ஸ்களுக்கு நகங்களை வெளிப்படுத்துவது நம் நகங்களை பலவீனமானதாக, எளிதில் உடையக் கூடியதாக மாற்றுகிறது. பாத்திரங்களை கழுவும் போது, சோப்புகள் மற்றும் ஸ்ப்ரேக்களை கொண்டு வீட்டை துடைக்கும் சமயங்களில் கிளவுஸ்களை பயன்படுத்தலாம்.
நகங்களை சிறிதாக வைக்கவும்:
நீளமான நகங்களை விட சிறிய நகங்களை வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் நீளமான நகங்களை பராமரிப்பதை விட சிறிய நகங்களுக்கு தேவைப்படும் பராமரிப்பு குறைவு மற்றும் எளிது. நகங்கள் சிறியதாக இருந்தால் அவற்றுக்கு அடியில் அழுக்கு சேரும் வாய்ப்புக்களும் குறைவு. அதே போல எளிதாக உடையாது, சுத்தமாகவும் வைக்க உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நகங்களை பாதுகாக்க அவற்றை சிறிதாக வைத்திருப்பது நல்லது.
Also Read : குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க வேண்டுமா..? நிபுணர்களின் பதில் உங்களுக்காக!
ஆர்ட்டிஃபீஷியல் நெயில்களை தவிர்க்கவும்:
செயற்கை நகங்களை வைத்து கொள்வது ட்ரெண்டாக இருந்தாலும் இது சில எதிர்மறை விளைவுகளையும் கொண்டுள்ளது. செயற்கை நகங்களை இயற்கையான நம் நகங்களோடு இணைக்கும் முறை மற்றும் க்ளூ பயன்பாடு நகங்களை பலவீனமாக்குவதோடு, நக இடுக்கில் அழுக்குகள் சேர வழிவகுக்கின்றன. செயற்கை நகங்கள் உங்கள் நகங்களை எளிதாக உடைய கூடியதாகவும் மாற்றும்.
ஆரோக்கிய டயட்:
ஆரோக்கியமான நகங்களின் வளர்ச்சிக்கு வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் புரோட்டின் உள்ளிட்ட முக்கிய ஊட்டசத்துக்கள் அடங்கிய உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். நகங்கள் பலவீனமாக இருந்தால் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்ற பின் பயோட்டின் போன்ற சப்ளிமெண்ட்ஸ்களை டயட்டில் சேர்க்கலாம்.
ஹைட்ரேட்டாக இருங்கள்:
போதுமான அளவு தண்ணீர் குடித்து உங்களை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது உங்கள் நகங்கள் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவி நகங்கள் உடைவதை மற்றும் உரிவதை தடுக்கிறது.
க்யூட்டிகல்ஸ் மீது கவனம் தேவை:
க்யூட்டிகல்ஸ் என்பது நகங்களின் கீழ் விளிம்பில் அமைந்துள்ள தெளிவான தோலின் ஒரு அடுக்கு ஆகும். இது நெயில் பெட் என்றும் அழைக்கப்படுகிறது. மெனிக்யூர் அடிக்கடி செய்ய வேண்டாம் என்பதறகான முக்கிய காரணம் க்யூட்டிகல்ஸ் சேதமடையும் என்பதே. நகங்களை வலுவாக வைத்திருப்பதற்கான பாதுகாப்பு அடுக்கை உருவாக்க நகங்களை மாய்ஸ்சரைஸ்டாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. க்யூட்டிகல் கிரீம்ஸ் பயன்படுத்துவது மாய்ஸ்சரைஸ்டாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நகங்கள் உடைவதை தடுக்கிறது.
சானிடைசரை தவிர்க்கவும்:
சானிடைசர் சருமம் மற்றும் நகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். கை சுகாதாரத்தை நீங்கள் பேண விரும்பினால் சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை கழுவவும். ஒருவேளை சானிடைசரை பயன்படுத்தினால் நகங்கள் மீது படும்படி அவற்றை பயன்படுத்தாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nail care