HOME»NEWS»LIFESTYLE»beauty how to get clear pimple with home remedies esr
எவ்வளவு முயற்சித்தும் முகப்பருக்களை அகற்ற முடியவில்லையா..? இந்த சிம்பிள் வழியை டிரை பண்ணி பாருங்க..!
சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு கெமிக்கல் காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துவது பாதிப்பை இன்னும் தீவிரமாக்கும். அந்த வகையில் சில இயற்கை வைத்தியங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நம் சருமத்தை எந்தவித சேதாரமும் இன்றி பாதுகாப்பது அவசியமானது. அந்தவகையில் பலரும் பாதிக்கப்படுவது முகப்பருக்களால்தான். குறிப்பாக சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு கெமிக்கல் காஸ்மெடிக்ஸ் பயன்படுத்துவது பாதிப்பை இன்னும் தீவிரமாக்கும். அந்த வகையில் சில இயற்கை வைத்தியங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வேப்பிலை
ரோஸ் வாட்டர்
முல்தானி மெட்டி
செய்முறை :
வேப்பிலைகளை நன்கு அலசிவிட்டு ரோஸ் வாட்டர் ஊற்றி அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் முல்தானி மெட்டி சேர்த்து மைய பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிவிடுங்கள்.