அழகான ரோஸி லிப்ஸ் வேணுமா ? வீட்டிலேயே பராமரிக்க ஈஸியான டிப்ஸ்..

காட்சி படம்

லிப்ஸ்டிக்கே போடாமல் உங்க உதடு அழக தெரிய இதை செய்யுங்கள்..

 • Share this:
  லிப்ஸ்டிக் என்பதும் இன்று அழகுசாதனங்களில் அத்தியாவசியமா மாறிவிட்டது. அதேபோல் லிப்ஸ்டிக் இருக்கிறது மேனேஜ் செய்துகொள்ளலாம் என்கிற நினைப்பில் உதட்டை அவ்வளவாக பராமரிப்பதும் இல்லை. இனி அப்படி இல்லாமல் உதட்டையும் கொஞ்சம் கவனியுங்கள். அப்படி கவனித்து வர லிப்ஸ்டிக் கூட தேவையில்லை.

  ரோஜா மற்றும் பால் : அரை கப் பாலின் சில ரோஜா இதழ்களை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலை ரோஜா இதழ்களை எடுத்து கொஞ்சம் பால் ஊற்றி மைய பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

  பின் அதை உதட்டில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிவிடுங்கள். இதை தினமும் செய்து வர உதட்டின் நிறம் மாறும்.

  பீட்ரூட் சாறு : பீட்ரூட் சாறை தேனில் நன்கு கலக்க கிரீம் பதத்தில் வரும். அதை உதட்டில் தினமும் தடவிக்கொள்ள நிறம் மாறும்.

  தேன் மற்றும் சர்க்கரை : தேனில் சர்க்கரை கலந்து உதட்டில் தடவி ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உதட்டிற்கு எண்ணெய் பதமும் கிடைக்கும். இதனால் உதடு நிறம் மாறி மென்மையாகவும் இருக்கும்.

  Also Read : கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தை வீட்டிலேயே போக்க டிப்ஸ்..

  மஞ்சள் மற்றும் பால் : மஞ்சளுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட்டை உதட்டில் அப்ளை செய்து காயும் வரை அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்து அதுவாகவே உதிர்த்து விழும்போது கழுவிவிடுங்கள். இதை இரவு தூங்கும் போது செய்து வாருங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: