கொரொனா அச்சுறுத்தலால் மக்கள் அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்றனர். வீட்டில் எதற்கும் நேரமில்லை என்று புலம்பிய பலருக்கும் இதுதான் சரியான வாய்ப்பு. குறிப்பாக தன்னை கவனித்துக்கொள்ளவும், உடலழகைப் பராமரிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த வகையில் தலைவி பட ஷூட்டிங்கில் மூழ்கியிருந்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கிறார். அதுவும் இயற்கை , அமைதி, தூய காற்று என தன்னுடைய மணாலி பங்களாவில் குடும்பத்தோடு ஓய்வெடுத்து வருகிறார். கங்னாவும் பல நேர்காணல்களில் மணாலி பங்களாதான் எனக்கு ஓய்வெடுக்க சிறந்த இடம் என கூறியுள்ளார். பல நேர்காணல் , ஃபோட்டோஷுட்டுகளையும் அந்த வீட்டில் செய்துள்ளார்.
அம்மா , தங்கையின் அரவணைப்பில் வீட்டில் இருக்கும் ஓய்வு நேரத்தில் சரும அழகைப் பராமரித்து வருகிறார். அதை கங்கனாவின் தங்கை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதலில் பகிர்ந்த புகைப்படத்தில் முகத்தில் சரும துவாரங்களில் பதுங்கியிருக்கும் கரும்புள்ளிகளை நீக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தங்கையின் மடியில் கங்கனா படுத்திருக்க அவர் கரும்புள்ளிகளை எடுத்து வருகிறார்.
Yeh kaisi actress hai kabhi beauty parlour Nahin jati, cosmetic beauty ki duniya kahan se kahan pahunch gayi iska face black heads se bhara pada hai 😬😬aaj mushkil se haath aayi hai 🥰
Pic courtesy Papa 🙏 pic.twitter.com/olD58jwsCV
நீங்களும் உங்கள் வீட்டில் இப்படி அம்மா , தங்கை , அக்கா இருந்தால் முயற்சிக்கலாம். எளிமையாக கரும்புள்ளிகளை வெளியேற்ற தண்ணீரை நன்கு கொதிக்கவிட்டு ஆவி பிடித்த பின் நீக்கினால் அடியோடு நீங்கும். இதை யாருடைய உதவியுமின்றி நீங்களே செய்யலாம்
அடுத்ததாக இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுடன் புல் தரையில் துணியை விரித்து அம்மா கைகளால் தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்கிறார். இந்தக் காட்சிகள் சிறு வயதில் அம்மா கைகளால் எண்ணெய் வைத்துக்கொண்ட பள்ளி நாட்களை நினைவூட்டுகின்றன. நீங்களும் இதை வீட்டி முயற்சிக்கலாம்.