ஹேர் கலரிங் செய்யும் முன் Strand Test கட்டாயம் செய்ய வேண்டுமா..? வீட்டிலேயே செய்வோருக்கு டிப்ஸ்

ஹேர் கலரிங்

ஸ்ட்ராண்ட் டெஸ்ட் ஏன் அவசியம்? என்றால் கலரிங் செய்வதால் ஒவ்வாமை, எரிச்சல், கலரிங் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • Share this:
நரை முடி மற்றும் இளம்நரை உள்ளவர்கள் மட்டும் தலைமுடிக்கு கலரிங் செய்து வந்த நிலையில், இப்போது ஹேர் கலரிங் செய்வது என்பது ஃபேஷனாகிவிட்டது. ஆரஞ்சு, மஞ்சள் என பல நிறங்களில் இளைஞர்கள் ஹேர் கலரிங் செய்துகொள்வதை பார்த்திருக்கிறோம். லாக்டவுன் காலங்களில் ’ஸ்பாக்கள்’ மூடப்பட்டுவிட்டதால், பலர் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்ய முயற்சி செய்துள்ளனர்.

ஹேர் கலரிங் செய்வதுதென்பது கடினமான பணியும் இல்லை, அதிக உழைப்பும் தேவையில்லை. ஆனால், பயன்படுத்தப்படும் கலரிங் தரம், முடி மற்றும் சருமத்தை பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஸ்ட்ராண்ட் டெஸ்ட் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏன் ஸ்ட்ராண்ட் டெஸ்ட் அவசியம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Strand Test செய்வது எப்படி?

ஸ்ட்ராண்ட் டெஸ்ட் ஏன் அவசியம்? என்றால் கலரிங் செய்வதால் ஒவ்வாமை, எரிச்சல், கலரிங் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ளலாம். பலருக்கும் இருக்கும் கேள்வி ஸ்ட்ராண்ட் டெஸ்ட் செய்வது எப்படி? எங்கு சென்று அந்த டெஸ்டை மேற்கொள்ள வேண்டும்? என்பது. இந்த டெஸ்டை நாமே செய்து, முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.* ஸ்டாராண்ட் டெஸ்ட் கிட் வழங்கப்பட்டுள்ள கையுறையை முதலில் அணிந்து கொள்ளுங்கள். கையுறையை அணிந்து கொண்டால் சாயத்தில் இருக்கும் நச்சுப் பொருட்கள் உங்கள் தோல்களை பாதிக்காது.

* பின்னர், ஒரு கிண்ணத்தை எடுத்து டெவலப்பரை சாயத்துடன் கலந்து நீங்கள் விரும்பும் கலரை உருவாக்கவும். கண்ணாடி கிண்ணம் உகந்தது. மற்ற கிண்ணங்களை பயன்படுத்தினால், அவற்றில் சாயம் ஒட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

* சாயத்தை அதிகமாக உருவாக்க வேண்டாம். ஒரே ஒரு மயிரிழைக்கு ஏற்ப குறைவான கலரிங் உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது உருவாக்கி வைத்திருக்கும் கலரை, காதுக்கு பின்புறத்தில் இருக்கும் ஒரே ஒரு மயிரிழையில் அப்ளை செய்யுங்கள்.* வேர் பகுதியில் அப்ளை செய்ய வேண்டாம். ஸ்ட்ராண்ட் டெஸ்டில் இருக்கும் உதவிக் குறிப்புகளை படித்து அதற்கேற்ப அந்த மயிரிழையில் கலரிங் செய்ய வேண்டும். பின்னர், 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் முடியை கழுவவும். இதன் பிறகு 24 மணி நேரம் விட்டுவிடுங்கள்.

* இந்த நேரத்தில் உங்களுக்கு ஒவ்வாமை, எரிச்சல், அரிப்பு போன்றவை தலையின் தோல்பகுதியில் ஏற்படுகிறதா? என்பதை கவனியுங்கள். பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் கலரிங் செய்யக்கூடாது. எந்த அறிகுறியும் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக கலரிங் செய்து கொள்ளலாம்.

ஸ்ட்ராண்ட் டெஸ்ட் ஏன் அவசியம்?

*தலை மற்றும் உடலில் இருக்கும் சில பிரச்சனைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வதற்கு உதவும்

*நீங்கள் உபயோகிக்க நினைக்கும் கலரின் நிறம், ஏற்றவையாக இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்தவற்கான முன்னோட்டமாக இருக்கும்.*எவ்வளவு நாள் வரை ஹேர் கலரிங் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

* ஏற்கனவே கூறியதுபோல், அலர்ஜி இருப்பதை அறிந்து கொள்வீர்கள்

 
Published by:Sivaranjani E
First published: