• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பார்லருக்கு போகாமல் வீட்டிலேயே அட்டகாசமான ஃபேஷியல்

பார்லருக்கு போகாமல் வீட்டிலேயே அட்டகாசமான ஃபேஷியல்

வீட்டிலேயே ஃபேஷியல்

வீட்டிலேயே ஃபேஷியல்

கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து சில நிமிடம் முகத்தை மசாஜ் செய்யவும்.

  • Share this:
    திருமணம், திருவிழா என்றதுமே பெண்களின் முதல் கவலை அந்த சிறப்பான நாளில், தங்களது முகம் பொலிவாக இருக்க வேண்டும் என்பது தான். சிலர் மாதந்தோறும் சரியாக பார்லருக்கு சென்று ஸ்கின்னை பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலருக்கோ அதற்கெல்லாம் நேரம் இருக்காது. அப்படியானவர்கள் பார்லருக்குப் போகாமல், வீட்டிலேயே ஃபேஷியல் செய்துக் கொள்ளும் டிப்ஸை இங்கு தருகிறோம்.

    க்ளென்ஸிங்

    காய்ச்சாத பாலை, ஒரு பஞ்சில் நனைத்து முகத்தை சுத்தப்படுத்தவும். பின்னர், ஒரு ஈரமான காட்டன் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு முகத்தை துடைக்கவும்.

    ஸ்கிரப்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், தேன் - ½ டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து, முகத்தை ஸ்கிரப் செய்துக் கொள்ளவும். பின்னர் காட்டன் வைத்து முகத்தை துடைக்கவும்.

    மசாஜ் க்ரீம்

    கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை கலந்து சில நிமிடம் முகத்தை மசாஜ் செய்யவும்.

    மாஸ்க்

    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், பால் - 2 டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை கலந்து பேஸ்டாக்கி 20 நிமிடங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் விடவும். பின்னர் தண்ணீரால் கழுவவும். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து வந்தால், முகம் பொலிவாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: