உங்களுக்கு ஆய்லி ஸ்கின்னா? இப்படி டீ டாக்ஸ் பண்ணுங்க..

காட்சி படம்

உங்களுக்கு எண்ணெய் சருமமா ? அப்ப இந்த மாதிரி டீ டாக்ஸ் பண்ணுங்க..

 • Share this:
  எண்ணெய் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட பெரும்பாலான  பொருட்கள் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சருமத்தின் மேல் அடுக்கை உலர்த்தப் பயன்படுகின்றன.  ஆனால் இது நீண்ட காலத்திற்கு உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்குமா? முற்றிலும் இல்லை!  அதற்கு என்ன செய்யலாம்.. வாருங்கள் பார்ப்போம்.

  எண்ணெய் மற்றும் பிளெமிஷஸ்களை அகற்ற சிறந்த வழி ஸ்கின் டீ டாக்ஸ் தான்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து படியுங்கள்..

  மூலப் பொருட்கள் :

  எண்ணெய், கறைபடிந்த (பிளெமிஷஸ்) சருமத்தை கையாளும் போது உங்கள் ஸ்கின் பராமரிப்பு பொருட்களில் உள்ள மூல பொருட்கள் மிகவும் முக்கியம். உங்கள் காஸ்மெடிக் பொருட்களில் தைம் உள்ளது, இது முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. விட்ச் ஹேசல், அத்தியாவசிய ஈரப்பதத்தை அகற்றாமல் சருமத்தை மேம்படுத்துகிறது. துத்தநாகம், சீபம் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. வைட்டமின் பி 3, வடுக்களை மறைத்து, தோல் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

  க்ளென்ஸிங் : 

  எண்ணெய் சருமத்தை நன்கு சுத்தப்படுத்த, நீங்கள் முதலில் அழுக்கு, ஒப்பனை போன்ற சீபம் சுரப்பை அதிகரிக்கும் விஷயங்களை அகற்ற வேண்டும். அதற்கான சிறந்த வழி இரண்டு முறை முகத்தை க்ளென்ஸ் செய்வது. மென்மையான ஒப்பனை நீக்கிகளை பயன்படுத்துங்கள். அதில் தைம், துத்தநாகம் மற்றும் விட்ச் ஹேசல் ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது துளை-அடைப்பு அழுக்கை குறைக்கும். முகத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் ஃபேஸ் வாஷ்களை தொடர்ந்து உபயோகிக்கவும்.

  ஸ்கிரப் ;

  எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடுத்ததாக எக்ஸ்ஃபோலியேஷனில் கவனம் செலுத்த வேண்டும்.  அடைபட்ட துளைகளை அகற்றவும், மேற்பரப்பு அழுக்குகளை அகற்றவும், புதிய, ஒளிரும் சருமத்தை மீண்டும் கொண்டு வரவும் இது சிறந்த வழி.

  தூக்கம் :

  எண்ணெய் சருமம் அல்லது வேறு வகை சருமம். எதுவாக இருந்தாலும் நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒப்பனை மூலம் பாதிக்கப்பட்ட துளைகள், பிரேக் அவுட்கள் மற்றும் கறைகளுக்கு இது நல்ல பயனை தரும். நீங்கள் உறக்கநிலையில் இருக்கும்போது உங்கள் தோல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். அதே நேரத்தில் உங்கள் ஒப்பனைகளையும் அகற்ற மறக்காதீர்கள்.

  Also read : ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா ?

  தண்ணீர் சத்து மிகுந்த உணவுகள் :

  கடைசியாக, உங்கள் உணவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் உள் அழகு தான் வெளியில் தெரியும்.  அதனால் அதிகப்படியான எண்ணெய், காரமான மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் துளைகளை அடைத்து, சீபம் உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கு பதிலாக வெள்ளரி, தர்பூசணி, தக்காளி, கீரை, ப்ரோக்கோலி போன்ற ஊட்டச்சத்து மற்றும் நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள். இது தோல் அழற்சியைத் தடுக்கும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி அதிகப்படியான சீபம் உற்பத்தியைத் தடுக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: