Home /News /lifestyle /

மாஸ்க்குகளால் தோல் பிரச்சினை ஏற்படுகிறதா? இதோ அதற்கான தீர்வுகள்!

மாஸ்க்குகளால் தோல் பிரச்சினை ஏற்படுகிறதா? இதோ அதற்கான தீர்வுகள்!

மாஸ்க்

மாஸ்க்

மாஸ்க் தொடர்ந்து அணிவதால் மூச்சு திணறல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் மாஸ்க்கை அகற்றி வைக்கலாம்.

    உலகெங்கிலும் COVID-19 என்னும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் வேளையில், நாம் பாதித்து விடக்கூடாது என்ற அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க்குகளை அணிய மக்களை ஊக்குவிக்க வேண்டிய நேரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இது ஒருபுறம் நன்மை அளித்தாலும், COVID மாஸ்க்குகளும் தோல் பிரச்சினைகள் போன்ற சில குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

    கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நாம அணியும் மாஸ்க்குகள் உணர்திறன் வாய்ந்த தோல் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிக்கும் தோலழற்சியைத் தூண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரிக்கும் தோலழற்சி என்பது வீக்கம், அரிப்பு, விரிசல் மற்றும் தொல்லை தரும் ஒரு நிலை. எனவே, நீண்ட காலத்திற்கு மாஸ்க் அணிவதால் எழக்கூடிய தோல் பிரச்சினைகளைத் தடுக்க சில குறிப்புகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

    உங்கள் தோல் வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதன் மூலம் சரும பிரச்சனைகளை தடுக்கலாம். மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுக்கும்போது, பின்வரும் இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்:

    எண்ணெய் சருமம் : ஜெல் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்
    இயல்பான தோல் : லோஷன் பயன்படுத்துங்கள்
    மிகவும் வறண்ட சருமத்திற்கு : கிரீம் பயன்படுத்துங்கள்

    மாஸ்க் அணிவதற்கு முன் சருமத்தை சுத்தம் செய்யுங்கள் :

    உங்கள் சருமம் சரியாக சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசர் மூலம் ஈரப்பதமாக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஏனெனில் அவை லேசானவை மற்றும் வெப்பமான காலநிலைக்கு ஏற்றவை, மேலும் இது எண்ணெய் அல்ல. உங்கள் முகத்தை ஈரப்பதமாக்கிய பிறகு, கூடுதல் பாதுகாப்புக்காக ஒரு பாக்டீரியா எதிர்ப்பு அல்லது அழற்சி எதிர்ப்பு கிரீமை தடவவும். இந்த நடவடிக்கைகள், தடிப்புகள் மற்றும் முகப்பருக்களை தவிர்க்கும்.



    பெட்ரோலியம் ஜெல் :

    பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உதடுகளைப் பாதுகாக்கலாம். வறண்ட சருமம் மற்றும் உதடு வெடிப்புகளை, நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படுத்தும். உங்கள் உதடுகளுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவதன் மூலம் உதடு வெடிப்புகளைத் தடுக்கலாம்:

    இதனை பயன்படுத்த வேண்டிய நேரம் :

    முகத்தை கழுவிய பின்பு
    உங்கள் மாஸ்க்கை அணிவதற்கு முன்பு
    தூங்குவதற்கு முன்பு

    மாஸ்க்கை நீக்கிய பின் முகத்தை கழுவவும் :

    மாஸ்க்கை நீக்கியதும் உங்கள் கைகளை சோப்பை கொண்டு கழுவவும், பின்னர் பாக்டீரியாக்களை அகற்ற உங்கள் முகத்தை சுத்தப்படுத்தவும். உங்கள் தோல் வகையைப் பொருட்படுத்தாமல் ஈரப்பதமாக்க மறக்காதீர்கள், இல்லையென்றால் தோல் வறண்டு எரிச்சல் மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    அழற்சி எதிர்ப்பு கிரீம் தடவுவம் :

    உங்களுக்கு முகப்பரு தோன்றியிருந்தால், மேலும் அது வளரக்கூடியதாக இருந்தால் அதற்கு அதிக கவனத்தை அழிப்பது முக்கியம். இல்லையென்றால் பின்னர் அது மோசமடைந்து எரிச்சலை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அழற்சி எதிர்ப்பு கிரீம் அல்லது துத்தநாக ஆக்ஸைடு தடவவும். முகப்பருவுக்கு வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள், உங்கள் முகப்பரு அதன் நிலையை மோசமாக்கினால் அதை கைவிடலாம்.



    சொறிய வேண்டாம் :

    சொறி ஏற்பட்டிருந்தால் அதன் மீது தேய்க்க வேண்டாம், அது வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். ஒரு நல்ல தோல் பராமரிப்பு தயாரிப்பை பின்பற்றுங்கள். மேலும் உங்கள் தோல் வகைகளுக்கு ஏற்ப பொருத்தமான தயாரிப்புகளைக் கண்டறியவும். தோல் நிலை மோசமடைந்துவிட்டால், நிபுணரின் உதவிக்கு தோல் மருத்துவரை சந்திக்கவும்.

    BirthControlPills | கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது..

    வெள்ளரிக்காயின் அற்புதம் :

    தோலில் வெள்ளரிக்காயை வெவ்வேறு வடிவங்களில் நெனெகல் பயன்படுத்தலாம். வெள்ளரி சாறுடன் ஐஸ் க்யூப்ஸை தேய்த்தால் அது சருமத்தை நல்ல முறையில் ஆற்றும், அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி முகத்தில் தேய்க்கலாம். நீங்கள் வீட்டில் ஃபேஸ் பேக்குகளை உருவாக்கலாம். மேலும் ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சருமத்தை பெற இந்த முறையை முயற்சி செய்யலாம்.

    காஸ்ட்லியான மாஸ்க்குகளை அணியுங்கள் :

    உங்கள் மற்ற துணி மாஸ்க்குகளைப் போல அழுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் ஒரு காஸ்ட்லியான மாஸ்க்குகளை அணியுங்கள். இருப்பினும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாஸ்க்குகளைப் பயன்படுத்தினால், பருத்தி அல்லது எளிதாக சுவாசிக்கக்கூடிய துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள்.

    ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு ஒரு துணி மாஸ்க்கை கழுவ வேண்டும் என்று பல சுகாதார நிறுவனங்கள் இப்போது பரிந்துரைக்கின்றன. இதை கழுவுவது மாஸ்க்கின் உள்ளே சேகரிக்கும் எண்ணெய்கள் மற்றும் தோல் செல்களை நீக்குகிறது, இது தோல் பிரச்சினைக்கு வழிவகுக்கும். நீங்கள் ஒரு துணி மாஸ்க்கை ஒரு சலவை இயந்திரத்தில் அல்லது கையால் கழுவலாம். இரண்டு வழிகளும் கிருமிகளையும் பிற துகள்களையும் நீக்குகின்றன. இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



    *ஒவ்வொரு மாஸ்க்கிலும் சலவை வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    *மாஸ்க்குகளை சூடான நீரில் கழுவவும்.

    *மணம் இல்லாத, ஹைபோஅலர்கெனி சலவை சோப்பு பயன்படுத்தவும்.

    *ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோல் வகை உள்ளது ஆகையால் சரும பிரச்சினைகள் எளிதில் பலருக்கு வந்துவிடும். உங்கள் சருமத்தின் வகையை அறிந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிக்கலில் இருந்து உங்களை காக்கும். மேலும் மாஸ்க் தொடர்ந்து அணிவதால் மூச்சு திணறல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் மாஸ்க்கை அகற்றி வைக்கலாம்.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Mask, Skin allergy

    அடுத்த செய்தி