வீட்டிலேயே இருக்கும் காஃபி தூளில் இத்தனை அழகுக் குறிப்புகளா..?

வீட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது இந்த குறிப்புகளை செய்து பாருங்கள். முகம் பிரகாசிக்கும்.

news18
Updated: July 20, 2019, 8:19 AM IST
வீட்டிலேயே இருக்கும் காஃபி தூளில் இத்தனை அழகுக் குறிப்புகளா..?
காஃபி பொடியில் அழகு
news18
Updated: July 20, 2019, 8:19 AM IST
காஃபியின் மணம் எவ்வளவு பெரிய டென்ஷனையையும் நொடியில் உருக வைத்து விடும். சுவைக்க மட்டுமல்ல. சருமத்திற்கும் காஃபி பொடி நல்ல அழகுசாதனப் பொருள். வீட்டிலேயே இருக்கும் காஃபி தூள்தானே என்று நினைத்துவிடாதீர்கள். அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மையாக வைத்துக்கொள்ள உதவும். வீட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது இந்த குறிப்புகளை செய்து பாருங்கள். முகம் பிரகாசிக்கும்.

காஃபி தூள் பயன்படுத்தி முகத்தை பொலிவுடனும், சருமத்தை மென்மையாகவும் வைத்துக்கொள்ள ஸ்க்ரப் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

காஃபி தூள் மற்றும் ஏலக்காய் : காஃபி தூள் ஒரு கப் , ஏலக்காய் பொடி 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து சீராக கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் 10 நிமிடங்கள் ஸ்கரபாக தேய்யுங்கள். இவ்வாறு இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.




காஃபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் : ஒரு கப் காஃபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேயுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி செய்தால் நீங்களே நினைத்துப் பார்க்காத வகையில் முகம் பளிச்சிடும். கை கால்களிலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடுங்கள்.

காஃபி பொடி மற்றும் கற்றாழை : கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காஃபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

Loading...

காஃபி தூள் மற்றும் தேன் : முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க தேன் சிறந்த தீர்வு. 4ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை , கால்கள் , கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

காஃபி தூள் மற்றும் ஷீ பட்டர் : சருமத்திற்கான சிறந்த உணவு ஷீ பட்டர். நான்கு ஸ்பூன் காஃபி தூள், 4 ஸ்பூன் ஷீ பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால் , கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...