Home » News » Lifestyle » BEAUTY HOW TO CUT HAIR IN HOME WITH SELF ESR

ஊரடங்கால் தலைமுடி காடு போல் வளர்ந்துள்ளதா..? வீட்டிலேயே ஹேர் கட் செய்ய சில ஐடியாக்கள்

சமூகவலைதளங்களிலும் கொரோனா பியர்ட், கொரோனா ஹேர் என ஹாஷ் டாக் பயன்படுத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஊரடங்கால் தலைமுடி காடு போல் வளர்ந்துள்ளதா..? வீட்டிலேயே ஹேர் கட் செய்ய சில ஐடியாக்கள்
ஹேர் கட்
  • Share this:
கொரோனா பரவலைத் தடுக்க சலூன் கடைகளை திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள் பலரின் முடி காடு போல் வளர்ந்துள்ளது. சமூகவலைதளங்களிலும் கொரோனா பியர்ட், கொரோனா ஹேர் என ஹாஷ் டாக் பயன்படுத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்கள் முயற்சித்தால் வீட்டிலேயே ஹேர் கட் செய்யலாம். எப்படி..?

முதலில் ஓடும் நீரில் தலையை அலசிக் கொள்ளுங்கள். பிறகு துவட்டி விட்டு சீப்பு கொண்டு சீவுங்கள். முடி சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். எனவே சிக்குதல் இருந்தால் எடுத்துவிட்டு வாரவும்.

அடுத்ததாக முடி வெட்ட யாரும் தொந்தரவு செய்யாத சவுகரியமான இடத்தை தேர்வு செய்து அமர்ந்துகொள்ளவும். வெட்டுவதற்கு கத்தரிக்கோல், கண்ணாடி , ட்ரிம்மர் அவசியம்.




நீங்கள் எந்த பக்கம் வகிடு எடுத்து வாருவீர்களோ அந்த பக்கம் நோக்கி தலைமுடியை வாரிக்கொள்ளவும். அதாவது இரு காதுகளை நோக்கி முடியை சீவிக்கொள்ளவும்.

தற்போது காதுக்கு கீழ் போகும் முடி, தேவையற்ற முடிகளை வெட்டவும். இவ்வாறு இருபுறமும் செய்து கொள்ளுங்கள்.அடுத்ததாக கத்தரிக்கோலால் வெட்ட முடியாத முடி, துண்டு முடிகளை ட்ரிம்மர் வைத்து ஸ்வைப் செய்யவும்.

இவ்வாறாக முடியை உங்களுக்கு போதுமான அளவில் வெட்டிவிட்டு தற்போது சீப்பால் வாரி பாருங்கள். கட்டிங் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். கூடுதலாக இருந்தால் வெட்டுங்கள்.

முடி வெட்டி முடித்ததும் தலைக்குக் குளித்துவிட்டு காய்ந்ததும் பாருங்கள். இனி சலூனே தேவையில்லை..நீங்களே வெட்டிக்கொள்ளலாமே என்று நினைப்பீர்கள்.










பார்க்க :

 
First published: April 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading