அனல் காற்றால் எரியும் முகம்..! கூலாக வைத்துக்கொள்ள சம்மர் பியூட்டி டிப்ஸ்..!
வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெயில் தாக்கம் இருக்கும்.

அனல் காற்றால் எரியும் முகம்..!
- News18 Tamil
- Last Updated: April 17, 2020, 8:52 PM IST
கொளுத்தும் வெயில் காற்று பட்டாலே உங்கள் சருமத்தின் நிறம் கருமையாகி, கரும்புள்ளிகள் வந்துவிடும். பருக்கள் இருந்தாலும் அவை எரியத் துவங்கும். பருக்கள் உடைய ஆரம்பிக்கும். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வெயில் தாக்கம் இருக்கும். இதுபோன்ற சூழலை சமாளிக்க என்ன வழி..?
வெள்ளரியை ஃபிரிட்ஜில் வைத்து பின் அதை மிக்ஸியில் மைய அரைத்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதேபோல் கற்றாழை சதைகளையும் அப்ளை செய்யலாம்.
முகம் எரிவது போல் தெரிந்தால் உடனே முகத்தைக் வெறும் தண்ணீரால் கழுவி மென்மையான துணியால் துடையுங்கள். வெளியில் சென்றால் ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தலாம். இயற்கையான வீட்டு அழகுக் குறிப்புகளை செய்தாலும் உங்கள் மணிக்கட்டில் அப்ளை செய்துவிட்டு பின் முகத்தில் அப்ளை செய்யுங்கள். சருமத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அரிப்பு, எரிச்சல் உண்டாகும்.

எந்த ஃபேஸ் பேக் அப்ளை செய்தாலும் 10 -15 நிமிடங்களுக்கு மேல் காய வைக்காதீர்கள். தக்காளி சாருடன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். தேன் ஈரப்பதம் அளிக்கும். தக்காளி கருமையை நீக்கும்.தேனுடன் மஞ்சளைக் குழைத்து அப்ளை செய்யலாம். மஞ்சள் பருக்கள், கிருமிகளை நீக்கும். தேன் ஈரப்பதம் அளிக்கும். தேன் , தயிர் மற்றும் கடலை மாவு மூன்றையும் குழைத்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதில் தயிர் கருமையை நீக்கும். கடலை மாவு கூடுதல் எண்ணெய் சுரத்தலை உறிஞ்சிவிடும்.
பார்க்க :
வெள்ளரியை ஃபிரிட்ஜில் வைத்து பின் அதை மிக்ஸியில் மைய அரைத்து முகத்தில் அப்ளை செய்யலாம். இதேபோல் கற்றாழை சதைகளையும் அப்ளை செய்யலாம்.
முகம் எரிவது போல் தெரிந்தால் உடனே முகத்தைக் வெறும் தண்ணீரால் கழுவி மென்மையான துணியால் துடையுங்கள். வெளியில் சென்றால் ஃபேஸ் மிஸ்ட் பயன்படுத்தலாம்.