ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சம்மர் டிப்ஸ் : முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?

சம்மர் டிப்ஸ் : முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?

சம்மர் டிப்ஸ்

சம்மர் டிப்ஸ்

வெயில் காலத்தில் முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதால் பிசுபிசுப்பு, முகப்பருக்கள் என முகம் பொலிவிழந்து காணப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வெயில் வாட்டி எடுக்கும் இந்த தருணத்தில் சருமத்தைப் பாதுகாப்பது அவசியம். குறிப்பாக வெயில் காலத்தில் முகத்தில் அதிக எண்ணெய் சுரப்பதும் அதனால் பிசுபிசுப்பு, முகப்பருக்கள் என பொலிவிழந்து காணப்படும். ஏற்கெனவே எண்ணெய் சருமம் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். இதை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

  மாய்ஸ்சரைஸர் : மாய்ஸ்சரைஸர் திடமாக இல்லாமல் லைட் வெயிட்டான ஈரப்பதம் நிறைந்ததாக வாங்குங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமான தோற்றத்தைப் பெறும். அதேபோல் நீங்கள் எந்த வகை சருமம் என்பதை அறிந்து வாங்க வேண்டும்.

  மேக்அப் : இதுவரை செய்த மேக்அப்பிலிருந்து சற்று குறைத்துக்கொள்ளுங்கள். அதிக கெமிக்கல் வேண்டாம். நிறைய கிரீம், ஃபவுடேஷன் போன்றவற்றை லைட்டாக அப்ளை செய்யலாம்.

  முகம் கழுவுதல் : வழக்கத்தை விட முகத்தை குறைந்தது மூன்று முறை கழுவி எண்ணெய்யை நீக்குங்கள். அப்படியே விட்டால் எண்ணெய் சருமத் துகள்களை அடைத்துக்கொள்ளும். உங்கள் சரும வகைக்கு ஏற்ப ஃபேஸ்வாஷ் வாங்கி பயன்படுத்துங்கள்.

  ஆண்கள் பொலிவான முகத்தைப் பெற கிச்சனில் ஒளிந்திருக்கும் அழகு ரகசியம்..!

  ஈரப்பதம் : எண்ணெய்யை உறிஞ்சக்கூடிய அதேசமயம் ஈரப்பதம், ஃபிரெஷ்னஸ் அளிக்கக் கூடிய blotting paper வாங்கி பயன்படுத்தலாம்.

  ஃபேஸ் மாஸ்க் : எண்ணெய்யை உறிஞ்சும் முல்தானி மெட்டி , சந்தனம், கடலை மாவு போன்றவற்றை பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் மாஸ்காக அப்ளை செய்யலாம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: