முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்யலாம்… எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!

வீட்டிலேயே ஈசியா ஹேர் கலரிங் செய்யலாம்… எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்!

How to Dye Hair at Home

How to Dye Hair at Home

சலூன் ஸ்டைலில் வீட்டிலேயே உங்கள் தலைமுடிக்கு கலர் செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

தற்போது, அனைவரும் ஹேர் கலரிங் செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால், ஹேர் கலரிங் ஸ்டைலாக கருதப்படுகிறது. எனவே, சலூன்களில் அதிக காசு கொடுத்து தங்களின் முடியை கலர் செய்கின்றனர். ஆனால், சில இளைஞர்கள் தங்களின் இளநரையை மறைக்க ஹேர் கலரிங் முறையை கையில் எடுத்துள்ளனர். பல்வேறு காரணங்களால் பலருக்கும் இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை எட்டி பார்க்கிறது.

இந்த பிரச்சனையை சரிவர கவனிக்க நேரம் இல்லாமையால், இதை மறைக்க பலர் தங்களின் முடியை கலர் செய்து வருகின்றனர். அப்படி நீங்களும் சலூன் ஸ்டலில் ஹேர் கலரிங் செய்ய விரும்பினால், வீட்டிலேயே உங்கள் முடிக்கும் எப்படி கலர் செய்வது என இங்கே காணலாம். இதற்கு பெரிதாக எந்த பொருட்களும் தேவைப்படாது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஹேர் கலரிங் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

மருதாணி பொடி - 1 கப்.

காபி தூள் - 2 டீஸ்பூன்.

கேரட் ஜூஸ் - 1 டீஸ்பூன்.

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன்.

ஹென்னா தயாரிக்கும் முறை :

 • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் மருதாணி தூள் மற்றும் காபி தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
 • இதையடுத்து, அதில் கேரட் ஜூஸ், ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கவும்.
 • பின்னர், அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலக்கவும். இப்போது, ஹேர் கலரிங் செய்ய பேஸ்ட் தயாராகிவிட்டது.
 • இதை, 10 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்கவும்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில், உங்கள் தலை முடியை விரித்து விடவும்.

பின்பு, பிரஷ் உதவியுடன் தயார் செய்த பேஸ்ட்டை முடியில் பக்குவமாய் தடவவும். உச்சியில் இருந்து தடவவும்.

எல்லா முடிக்கும் தேவையில்லை என்றால், தேவைப்படும் முடியில் மட்டும் கூட தேய்த்து கொள்ளலாம்.

இதை சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை அப்படியே தலையில் ஊற விடவும். பின்னர், ஷாம்பு இல்லாமல் தலையை தண்ணீரை கொண்டு அலசவும்.

பராமரிப்பது எப்படி?

 • உங்கள் தலைமுடிக்கு இயற்கையான முறையில் கலரிங் செய்து இருந்தால், ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
 • சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டாம். இது, முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
 • வாரத்திற்கு 2 முறைக்கு மேல் ஷாம்பு தேய்த்து தலைக்கு குளிக்க கூடாது.

First published:

Tags: Beauty Tips, Hair care, Hair coloring