தேங்காய் எண்ணெய் மூலம் முகப்பருக்களை அகற்றுவது எப்படி...?

தேங்காய் எண்ணெய்யில் உள்ள ஃபேட்டி ஆசிட் மற்றும் கிருமி நீக்கி பாதிப்பு நிறைந்த கிருமித் தொற்று, இறந்த செல்களை நீக்கி தூய்மையாக்கும்.

news18
Updated: August 10, 2019, 9:53 AM IST
தேங்காய் எண்ணெய் மூலம் முகப்பருக்களை அகற்றுவது எப்படி...?
தேங்காய் எண்ணெய்
news18
Updated: August 10, 2019, 9:53 AM IST
தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே சருமத்திற்கு அழகு சேர்க்கக் கூடியது. இதில் உள்ள ஃபேட்டி ஆசிட் மற்றும் கிருமி நீக்கியானது பாதிப்பு நிறைந்த கிருமித் தொற்று, இறந்த செல்களை நீக்கி தூய்மையாக்கும்.

சருமத்தை மென்மையாக பாதுகாப்பதிலும் தேங்காய் எண்ணெய் சிறந்தது. பருக்கள் கொண்ட முகத்திற்கு எந்த கெமிக்கல் பொருட்களும் ஆபத்தாக மாறலாம். இதை தவிர்க்க பயமே இல்லாமல் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். பின் பருக்கள் உள்ள இடத்தில் தடவி 5 - 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் பருக்கள் நீங்கும்.மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலந்து முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 - 30 நிமிடங்கள் காய வைத்துக் குளிர்ந்த நீரில் கழுவவும். இதில் உள்ள எலுமிச்சை பருக்கள் தோன்ற காரணமான அழுக்கு, இறந்த செல்களை நீக்கும். மஞ்சள் ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படும்.

கிரீன் டீ , தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து நன்குக் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். ஒருநாள் விட்டு ஒரு நாள் இதை செய்யலாம். இதனால் தேவையற்ற எண்ணெய் வடிதலை தவிர்க்கலாம்.

தேங்காய் எண்ணெய், தயிர் இரண்டையும் ஒரு ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் சேர்த்து கலந்துகொள்ளவும். முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் பலன் கிடைக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் படுக்கைக்கு செல்லும் முன் செய்யுங்கள்.
First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...