ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதில் குழப்பமா...?

ஸ்கின் டோன் குறித்து தெரிந்து கொள்ள மேற்புற முக -நிறத்தை தேர்வு செய்யாமல் முகத்தில் அடிப்படையான நிறத்தைக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் முகத்தின் மேற்பரப்பு நிறம் பருவ மாற்றம், இட மாற்றம், காற்று ஆகியவற்றினால் வேறுபடும்

ஃபவுண்டேஷனை தேர்வு செய்வதில் குழப்பமா...?
ஃபவுண்டேஷனை தேர்வு
  • News18
  • Last Updated: October 9, 2019, 6:45 PM IST
  • Share this:
திடீரென எப்படி இந்த அழகு என்று ஆச்சரியப்படுவதற்கு பின்னாடி ஒளிந்திருக்கும் ரகசியம் ஃபவுண்டேஷன். அதை நிறம் மற்றும் சருமத் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்யாவிட்டால் நிலைமை தலைகீழாக பூதம் போல் மாற்றிவிடும். திட்டு திட்டாக தோற்றத்தை கெடுத்து அழகையே பாழாக்கிவிடும். இதற்கு சரியான ஃபவுண்டேஷனை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சருமத் தன்மைக்கு ஏற்ற ஃபவுண்டேஷன்

டிரை ஸ்கின்னிற்கு கிரீம் தன்மைக் கொண்ட பவுண்டேஷன் பொருத்தமானது. இது டிரையாக இருக்கும் ஸ்கின்னிற்கு மாய்ஸ்சரைசராக செயல்படும். பவுண்டேஷன் மேல் காம்பேக்ட் பவுடர் அப்ளே செய்வதைத் தவிர்க்கவும்.


ஆயில் ஸ்கினிற்கு, மாட் தன்மைக் கொண்ட பவுண்டேஷன் சரியான தேர்வு. இதனால் அதிகப்படியான ஆயிலைக் கட்டுப்படுத்தமுடியும். மேலும் ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் முகப்பருக்களாலும் அவதிப்படுவர். அவர்கள் பருக்களை மறைத்து தெளிவான மேக்கப் அப்ளை செய்ய இது சரியான ஃபவுண்டேஷன். ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் காம்பேக்ட் பவுடர் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

காம்பினேஷன் ஸ்கின் டைப்பிற்கு லோஷன் மற்றும் க்ரீம் தன்மைக் கொண்ட பவுண்டேஷன் அளிப்பது நல்லது. இது இரண்டு விதமாகவும் செயல்படும். ஆயில் மற்றும் டிரைனஸ்ஸை சமன்படுத்தும்.

அடுத்ததாக உங்களின் ஸ்கின் டோன் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். மேற்புற முக -நிறத்தை தேர்வு செய்யாமல் முகத்தில் அடிப்படையான நிறத்தைக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் முகத்தின் மேற்பரப்பு நிறம் பருவ மாற்றம், இட மாற்றம், காற்று ஆகியவற்றினால் வேறுபடும். இந்தியர்களின் ஸ்கின் அண்டர்டோன் பொதுவாக ஆலிவ் மற்றும் கோல்டு எல்லோயிஷ் டைப்பில் இருக்கும்.

ஸ்கின் டைப்பிற்கான பவுண்டேஷனைத் தேர்வு செய்தபின் ஸ்கின் டோனைக் கண்டறிய சிறு துளி பவுண்டேஷன் ஷேடை நெற்றி, தாடை அல்லது கழுத்துப் பகுதியில் அப்ளே செய்து பார்க்க வேண்டும். பவுண்டேஷன் அப்ளே செய்ததே தெரியாதது போல் இருந்தால் அது உங்களின் ஸ்கின் டோனோடு சரியாக பிளெண்ட் ஆகிறது என அர்த்தம். அதுதான் உங்களின் ஸ்கின் டோனிற்குப் பொருத்தமான பவுண்டேஷன். கைகளில் பவுண்டேஷன் அளித்து சோதனைச் செய்வதைத் தவிற்கவும்.

டஸ்கி மற்றும் டார்க் ஸ்கின்-னிற்கு வாட்டர் அல்லது செமி மாட் தன்மைக் கொண்ட பவுண்டேஷன் எடுப்பாக இருக்கும். இது உங்கள் நிறத்தோடு எளிதில் பிளெண்டாகிவிடும். ஷேடுகளைப் பொருத்தவரை ஆல்மண்ட் , செஸ்நட்ஸ், எக்ஸ்பிரஸ்ஸோ போன்றவை பொருத்தமானதாக இருக்கும். அதில் உங்கள் ஸ்கின்னோடு ஒத்துப் போகக் கூடியதை தேர்வு செய்யுங்கள்.

வீட்டிஷ் நிறம் கொண்டவர்கள் எல்லோ, ஹனி, கோல்டன் என வார்ம் ஷேடுகள் சரியான பொருத்தமாக இருக்கும்.

ஃபேராக இருப்பவர்கள் கோல்டன் எல்லோ, நேச்சுரல், வார்ம் பெய்ஜ் ஷேடைத் தேர்வு செய்து இவற்றில் சரியான ஒன்றை சோதனை செய்வது சிறப்பு.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading