• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்க ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற சரியான பேஸ் சீரமை தேர்ந்தெடுப்பது எப்படி ?

உங்க ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற சரியான பேஸ் சீரமை தேர்ந்தெடுப்பது எப்படி ?

பேஸ் சீரம்

பேஸ் சீரம்

உங்கள் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற பேஸ் ஆயிலை இப்படி தேர்ந்தெடுங்கள்..

  • Share this:
    பொதுவாக எல்லோருடைய தோலும் ஓரே மாதிரியாக இருப்பது போலத் தோன்றும். எப்படி முக அமைப்பு ஓரே மாதிரியாக இருப்பதில்லையோ அதே போல தோல் அமைப்பும் ஓரே மாதிரியாக இருப்பதில்லை. அவற்றிலும் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்துவமான ஸ்கின் டைப் தான், அவரின் அழகு பராமரிப்பை தீர்மானிக்கிறது. அதை சரியாகத் தெரிந்து கொண்டால்தான் அழகுக் குறிப்பு முதல் ஸ்கின் ஆயில் அல்லது கிரீம் வரை எல்லாம் பலன் தரும். சரி வாருங்கள், இந்தப் பதிவில் எந்த சருமவகைக்கு எதை யூஸ் பண்ணலாம் என்று பார்ப்போம்.

    எண்ணெய் மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமம்: எவ்வளவு மேக்கப் போட்டாலும் அடிக்கடி முகத்தை கழுவினாலும் ஒருசிலரின் சருமம் எப்போதும் எண்ணெய் பசையுடனே காணப்படும். இந்த சருமம் உள்ளவர்கள் டீ ட்ரீ மற்றும் வேம்பு ஆகிய ஆயிலை பயன்படுத்தலாம், இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், பாக்டீரியா தொற்றுகளை முற்றிலும் அகற்றவும் உதவும் ஒரு சிறந்த கலவையாகும். மேலும் இவர்கள் கிளென்சர் உயயோகிக்கலாம்.

    இது எண்ணெய்ப் பசையை குறைக்கும். இவர்கள் அட்வான்ஸ் கிளென்சரும் டோனர் போட வேண்டும். எண்ணெய் பசை அதிகமுள்ள சருமத்துக்கு மாய்சரைர் (ஈரப்பதம்) தேவை. எனவே 2 நாட்களுக்கு ஒரு முறை ஆயில் ப்ரீ மாய்சரைசரை உபயோகப்படுத்தினால் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

    உலர்ந்த சருமம் : எந்தவொரு பேஸ் ஆயிலும் இந்த தோல் வகைக்கு நன்றாக வேலை செய்யும். உலர்ந்த சருமம் எப்பொழுதும் வறட்சியாக காணப்படும். இதற்கு முகத்தை க்ளென்சிங் மில்க் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை கைகளில் எடுத்துக் கொண்டு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்க்க வேண்டும். மூலிகை கலந்த கிளென்சர், மாய்சரைசர் உபயோகப்படுத்தலாம். மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் ஆயிலை பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகளோ எந்தவிதத் தீங்கோ ஏற்படாது.

    Also read : 50 வயதை கடந்தாலும் முகம் ஜொலிக்க வேண்டுமா ? இதை ஃபாலோ பண்ணா போதும்..

    சாதாரண சருமம் : சாதாரண வகை சருமத்தை கொண்டவர்களை அதிர்ஷ்டசாலிகள் எனலாம். இந்த சருமம் வறட்சியாகவும் இருக்காது. எண்ணெய் பசையோடும் இருக்காது. அதே போல இந்த வகை சருமத்தில் வெடிப்புகளும் ஏற்படாது. நாள் முழுவதும் ஒரே மாதிரி காணப்படும். இந்த சருமத்தை உடையவர்களுக்கு எந்த விதமான மேக்கப்பும் ஒத்துக் கொள்ளும். இது போன்ற சருமமுள்ளவர்கள் பாரம்பரிய கும்கமாடி/ஆர்கன் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

    மென்மையான தோல்: இந்த மாதிரி சருமம் உள்ளவர் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஆலிவ் ஆயில் சிறந்த தேர்வாக இருக்கும். சாப்பிடும் உணவு, யூஸ் செய்யும் மேக்கப், க்ரீம், லோஷன் போன்றவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும். சிலருக்கு அன்னாச்சி பழம், தக்காளி, எலுமிச்சை, கத்திரிக்காய் கூட அவர்ஜியை தரும். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியை தரும். புதிதாக மேக்கப் போட்டாலும் அலர்ஜி தான். எனவே அதை தெரிந்து பயன்படுத்துங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: