Home /News /lifestyle /

பிட்டம் கருப்பாக இருக்கிறதா? ஆண்களுக்கான ஈஸி டிப்ஸ்..!

பிட்டம் கருப்பாக இருக்கிறதா? ஆண்களுக்கான ஈஸி டிப்ஸ்..!

காட்சி படம்

காட்சி படம்

பிட்டப்பகுதி கருமை அடைய தோல்களுக்கு அடியில் உள்ள மெலனோசைட்டுகளின் அதிக செறிவு காரணமாக இருக்கலாம் என தோல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முகத்தில் சூரிய ஒளி படுவதால் முகம், கை, கால்களின் நிறம் மாறுவது இயற்கையானது. ஆனால் பிட்டப்பகுதி கருமை அடைய தோல்களுக்கு அடியில் உள்ள மெலனோசைட்டுகளின் அதிக செறிவு காரணமாக இருக்கலாம் என தோல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் அதிக உராய்வு உண்டாகிறது. இது தோல் எரிச்சல் மற்றும் இறூதியில் ஹைப்பர் பிக்மெண்டேஷன் உண்டாக்கலாம். பிட்டப்பகுதியில் ஹைப்பர் பிக்மெண்டேஷன் உண்டாக்குவதில் முகப்பருவும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிட்டம் கருமை அடைவதை தடுக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளை கீழே கொடுத்துள்ளோம்.

இறுக்கமான உள்ளாடைகளை தவிருங்கள்:

இறுக்கமான உள்ளாடைகள், ஜுன்ஸ் ஆகியவற்றை அணிவதை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. இறுக்கமான ஆடைகளை அடைவது அழுக்கு, வியர்வை மற்றும் இறந்த செல்களை உருவாக்க காரணமாக அமைகிறது. வியர்வையுடன் கூடிய ஆடைகளை சிறிது நேரம் வைத்திருந்தாலும் பிட்டத்தில் இருக்கும் கருமையை அதிகரிக்க செய்யலாம். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது உடலின் அந்தரங்க பகுதிகளில் அதிக வியர்வை சேரும், இதனால் கருமை நிறம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஸ்க்ரப் செய்யாதீர்கள்:

உடலின் அந்தரங்க பகுதியைப் போலவே பிட்டத்தை ஸ்க்ரப் கொண்டு அழுத்தி தேய்க்க கூடாது. பாடி வாஷைப் பயன்படுத்தி உங்கள் கைகளால் மெதுவாக தேய்க்கவும், எக்காரணம் கொண்டு ஸ்க்ரப்பை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது உராய்வை ஏற்படுத்தி சருமத்தை கருமையாக்கலாம்.

லேசர் சிகிச்சை:

பிட்டப்பகுதியில் உள்ள அதிகப்படியான கருமை நிறத்தை போக்க லேசர் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். லேசர் பிரைட்னிங் சிகிச்சையை பயன்படுத்த கருமையான பின்புறத்தின் நிறத்தை மாற்றலாம்.



also read : பெண்குயின் கார்னர் 32: உடலுறவுக்கு பின் பிறப்புறுப்பில் எரிச்சல்... ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை என மருத்துவர் விளக்கம்

கிரீம் அல்லது எண்ணெய் பயன்படுத்துங்கள்:

உராய்வை தடுக்கவும், சருமம் சூடாவதை குறைக்கவும் உதவக்கூடிய கிரீம் அல்லது எண்ணெய் பூசலாம். இது இறந்த சரும செல்களை நீக்கி உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். ஆலிவ் எண்ணெயில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. இதனால் ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.

பிட்டத்தின் நிறத்தை மாற்ற உதவும் சில குறிப்புகள் இதோ:

1) 1/2 டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து பிட்டம் மற்றும் உள் தொடைகளில் மென்மையாக மசாஜ் செய்வது போல் தேய்க்கவும். வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து தண்ணீரில் கழுவி விடவும். இது கருமை நிறத்தை குறைக்க உதவும்.

2) ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து பிட்டத்தை பூசி அதனை நன்றாக காயவைத்து சுத்தப்படுத்தலாம்.

3) குளியலுக்கு முன்பு 2-3 டீஸ்பூன் முல்தானி மிட்டியில் ஆரஞ்சு சாறு கலந்த கலவையை பிட்டத்தில் தடவி, நன்றாக காய்ந்ததும் குளிக்கவும்.

4) உருளைக்கிழக்கு இயற்கையாகவே பிளீச்சிங் தன்மை கொண்டது. அதனுடன் தேனைக் கலந்து தடவி, காயவைத்து சுத்தப்படுத்துவது நல்ல பலன் கொடுக்கும்.

5) 2- 3 டீஸ்பூன் மஞ்சள் உடன் தயிர் சேர்த்து, அதனை கருமையான சருமத்தின் பகுதிகளில் தடவி விடவும். பிறகு வை உலர வைக்கவும், இறுதியாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Beauty Tips, Skin Care

அடுத்த செய்தி