ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரெட் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி? ட்ரிக்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

ரெட் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி? ட்ரிக்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

எல்லாவித ஸ்டைல் டிரெஸ்களுக்கும் மேட்ச்சாக கூடிய ரெட் கலர் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அது உங்கள் உதடுகளை அழகாக அதே சமயம் கவர்ச்சியாக மாற்றும்.

எல்லாவித ஸ்டைல் டிரெஸ்களுக்கும் மேட்ச்சாக கூடிய ரெட் கலர் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அது உங்கள் உதடுகளை அழகாக அதே சமயம் கவர்ச்சியாக மாற்றும்.

எல்லாவித ஸ்டைல் டிரெஸ்களுக்கும் மேட்ச்சாக கூடிய ரெட் கலர் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அது உங்கள் உதடுகளை அழகாக அதே சமயம் கவர்ச்சியாக மாற்றும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெண்களின் லிப்ஸ்டிக் கலெக்ஷனில் பல கலர்கள் இருந்தாலும் ரெட் கலர் லிப்ஸ்டிக் நிறம் எந்த ஸ்டைல் டிரெஸ்ஸிற்கும் மேட்ச்சாக இருக்கிறது. ஆனால் பலரும் ரெட் லிப்ஸ்டிக்கை சரியாக பயன்படுத்த தெரியாமல் கவர்ச்சியான தோற்றத்தை தவறவிடுகிறார்கள்.

  எல்லாவித ஸ்டைல் டிரெஸ்களுக்கும் மேட்ச்சாக கூடிய ரெட் கலர் லிப்ஸ்டிக்கை சரியாக அப்ளை செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், அது உங்கள் உதடுகளை அழகாக அதே சமயம் கவர்ச்சியாக மாற்றும். மாலை அல்லது இரவு நேரத்தில் தயங்காமல் ரெட் லிப்ஸ்டிக்கை பலரும் பயன்படுத்தும் அதே நேரம் பகல் நேரத்தில் இந்த கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை பலரும் தவிர்க்கிறார்கள்.

  எந்த நேரத்திலும் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை தயக்கமின்றி பயன்படுத்தி கவர்ச்சியான லுக்கை பெற, அதை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ரெட் லிப்ஸ்டிக்கை சரியாகபயன்படுத்த உதவும் ட்ரிக்ஸ்களை கீழே பார்க்கலாம்.

  Read More : ஸ்கின் எப்போதும் ஆயிலாவே இருக்கா..? வாரத்தில் 2 முறை இந்த ஃபேஸ் பேக் அப்ளை பண்ணுங்க..!

  ரெட் லிப்ஸ்டிக் பயப்படுத்த துவங்கும் முன் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள்:

  • லிப் பாம், லிப் லைனர் பென்சில், லிப் பிரஷ், கன்சீலர், ஃபேஸ் பவுடர், டிஷ்யூஸ்
  • ரெட் கலர் ட்ரூ ரெட், ப்ளூ டோன், ஆரஞ்ச் டோன் என பலவகை டோன்களாக பிரிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா.! எனவே உங்களுக்கு சூட்டாகும் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை தெரிந்து கொள்ள பல்வேறு ஷேடுகளை டெஸ்ட் செய்து பார்த்து முடிவு செய்யுங்கள்.
  • மேட், கிளாஸ்ஸி, ஷீர், கிரீம் மற்றும் லிக்விட் லிப்ஸ்டிக் இடையே உங்களுக்கு தோதான ஃபினிஷ் & ஃபார்முலாவை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
  • லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன் லிப் ஸ்க்ரப் அல்லது பழைய டூத் பிரஷ் மூலம் உங்கள் உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்து கொள்ளுங்கள். இந்த பழக்கம் உங்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதட்டில் நீடிக்க உதவுகிறது.
  • லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன் உங்கள் உதடுகளை மாய்ஸ்சரைஸ் செய்ய நரிஷிங் லிப் பாம் (nourishing lip balm) அல்லது ப்ரைமர் பயன்படுத்துங்கள்.
  • லிப்ஸ்டிக் உதட்டில் சரியாக அப்ளை செய்யப்படுவதை உறுதி செய்ய லிப் பென்சிலை பயன்படுத்தலாம்.
  • நீங்கள் பிகினர் என்றால் MAC Cosmetics-ன் ரஷியன் ரெட் போன்ற ஷேடோவை முயற்சிக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு ஸ்கின் டோனுக்கும் சரியான ரெட் லிப்ஸ்டிக்காக இருக்கும்.

  படிப்படியான வழிமுறை:

  முதலில் நரிஷிங் லிப் பாம் பயன்படுத்துங்கள். உங்கள் உதடுகள் வெடித்து அல்லது வறண்டு காணப்பட்டால் வெட் வைப்பை பயன்படுத்தி மெதுவாக எக்ஸ்ஃபோலியேட் செய்து டெட் ஸ்கின்ஸை அகற்றுங்கள்.
  பின் உடனடியாக லிப் ஸ்டிக்கை பயன்படுத்தாமல் லிப் பாமை கிளியர் செய்ய டிஷ்யூவை பயன்படுத்துங்கள். லிப்ஸ்டிக் உதடுகளில் நன்றாக ஒட்டி கொள்ள ஏதுவாக உதடுகளில் பவுடரை கொண்டு லேயர் உருவாக்குங்கள்.
  லிப் லைனரை பயன்படுத்தும் முன் லிப்ஸ்டிக் தடவவும், கூடவே லிப் பிரஷ்ஷை பயன்படுத்துங்கள்.
  உதடுகளில் லிப்ஸ்டிக் சமச்சீரற்று இருந்தால் லிப் பென்சிலை பயன்படுத்தி அதை சரி செய்யுங்கள்.
  இப்போது டிஷ்யூ பேப்பரை கொண்டு உதடுகளில் வைத்து அழுத்தி அதிகப்படியான ஈரப்பதம் அலல்து எண்ணெயை உறிஞ்சி எடுத்துவிடுங்கள்.பின் இரண்டாவது கோட்டிங் லிப்ஸ்டிக் அப்ளை செய்யுங்கள்.
  உதடுகளின் விளிம்புகளை சுத்தம் செய்து ஷார்ப் செய்ய சிறிது கன்சீலர் கொண்ட ஆங்குலர் பிரஷ்ஷை பயன்படுத்தவும். பின் பிரஷ்ஷில் கொஞ்சம் ஃபேஸ் பவுடரை எடுத்து பவுடர் ஸ்கின்னிற்காக அப்ளை செய்யுங்கள்.
  இறுதியாக லிப்ஸ்டிக் கரை பற்களில் படிந்திருக்கிறதாஎன்பதை ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Beauty parlour, Beauty Tips, Lipstick