Home /News /lifestyle /

கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே ’ஹேர் கலரிங்’ : லவங்கப் பட்டை இருந்தால் போதும்..!

கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே ’ஹேர் கலரிங்’ : லவங்கப் பட்டை இருந்தால் போதும்..!

ஹேர் கலரிங்

ஹேர் கலரிங்

டிரை பன்னி பாருங்க..நல்ல பலன் கிடைக்கும்..!

  • News18
  • Last Updated :
    இலவங்கப் பட்டை தலை முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கக் கூடியது. அதேசமயம் உங்கள் தலைக்கு ஹேர் கலரிங் செய்ய நினைத்தாலும் இந்த இலவங்கப்பட்டை உதவும். 

    தேவையான பொருட்கள் :

    தேன் - 2 ஸ்பூன்

    இலவங்கப் பொடி - 1 ஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1/2 ஸ்பூன்

    கண்டிஷ்னர் - 1/2 ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு



    செய்முறை :

    வீட்டில் இலவங்கப்பட்டை இருந்தால் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து நன்குக் கலக்குங்கள்.

    பின் ஆலிவ் எண்ணெய் மற்றும் கண்டிஷ்னர் சேர்த்துக் கலக்குங்கள்.

    மிகவும் கெட்டியாக அல்லாமல் சற்று தண்ணீர் பதத்திற்கு இருக்க வேண்டும். எனவே கெட்டிப்பதத்தில் இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலக்குங்கள்.

    இந்த இலவங்கப் பேஸ்ட் அரை மணி நேரம் ஊற வேண்டும்.

    அதற்குள் தலையை சிக்குகள் இல்லாமல் வாரிக்கொள்ளுங்கள்.
    அரை மணி நேரம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக முடி எடுத்து பிரெஷ் கொண்டு அந்த இலவங்கப் பேஸ்டை தலையில் தடவுங்கள்.

    நான்கு மணி நேரம் ஊற விடுங்கள். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.

    இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி