Home /News /lifestyle /

அக்குள் பகுதியில் உள்ள கருமையை போக்குவது எப்படி..? சூப்பரான  5 டிப்ஸ்!

அக்குள் பகுதியில் உள்ள கருமையை போக்குவது எப்படி..? சூப்பரான  5 டிப்ஸ்!

அக்குள் பராமரிப்பு

அக்குள் பராமரிப்பு

மரபணுக்கள் வழியாகவும், அலுமினியம் மற்றும் மேலும் பல வேதிப்பொருட்களை கொண்ட வாசனை பொருட்களை பயன்படுத்துவது, ஷேவ் செய்யும் போது ஏற்படும் சிராய்ப்பு, அதிக அளவில் இறந்த செல்கள் தேங்கி இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
அக்குள் பகுதியில் ஏற்படும் கருமையானது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனை தான். இதனால் சிலருக்கு மனதளவிலும் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருக்கிறது ஆனால் இது ஏற்படுவதற்கு பலவித காரணங்கள் உள்ளன. மரபணுக்கள் வழியாகவும், அலுமினியம் மற்றும் மேலும் பல வேதிப்பொருட்களை கொண்ட வாசனை பொருட்களை பயன்படுத்துவது, ஷேவ் செய்யும் போது ஏற்படும் சிராய்ப்பு, அதிக அளவில் இறந்த செல்கள் தேங்கி இருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன.

அந்த வகையில் அக்குள் பகுதியில் உள்ள கருமையை நீக்குவதற்காக சில எளிய வழிமுறைகள் இதோ:

1. சத்துள்ள உணவு பழக்கம்:

நம்முடைய உணவில் அதிக அளவில் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளவாறு நமது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக அளவிலான பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அக்குள் பகுதியில் ஏற்படும் கருமையை தடுப்பது, மட்டுமல்லாமல் இதனால் உடலுக்கும் பலவித நன்மைகள் ஏற்படும்.

2. வேக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும் :

தற்போது அக்குள் பகுதிகளில் உள்ள முடியை நீக்குவதற்கு ஹாட் வேக்ஸ்(Hot-wax) எனப்படும் மெழுகை பயன்படுத்தி நீக்கும் முறை தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் சிலர் அதற்காக பலவித கிரீம்களையும் பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக ஹாட் வாக்சிங்கின் போது நம்முடைய தோல் பகுதியில் உள்ள மிக மெல்லியதான ஒரு அடுக்கானது பிரிந்து வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் அதன் மூலம் அந்தப் பகுதியில் பாக்டீரியா, வைரஸ், ஈஸ்டு போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் அதிக அளவில் இந்த வேக்ஸின் செய்யப்படுவதால் நம்முடைய தோலானது இன்னும் அதிக கருமையாக மாறிவிடக்கூடும்.



3. இரசாயன பொருட்களைக் கொண்ட வாசனை திரவியங்களை தவிர்த்தல்:

உடல் துர்நாற்றத்தை தடுப்பதற்காக நாம் பயன்படுத்தும் வாசனை பொருட்களானது அதிக அளவில் இரசாயன பொருட்களை கொண்டுள்ளது. முக்கியமாக பாராபென்ஸ், ட்ரைக்லோசன் மற்றும் அலுமினியம் ஆகிய ரசாயன பொருட்களை அடங்கிய வாசனைப் பொருட்களை நாம் பயன்படுத்தும் போது, அவை நம்முடைய தோலுக்கு எரிச்சல் ஊட்டுபவையாகவும் சில நேரங்களில் ஒவ்வாமையையும் ஏற்படுத்தும். இது போன்ற தோளுக்கு கெடுதல் தரக்கூடிய வேதி பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பார்ட் பார்டாக உடலில் கொழுப்பை கரைக்கும் உத்திகளை தெரிந்து கொள்ளுங்கள்!

4. க்ளைகாலிக் அமிலத்தை பயன்படுத்தலாம்:

அக்குள் பகுதியில் உள்ள கருமையை நீக்குவதற்கு க்ளைகாலிக் எனும் அமிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இறந்த செல்களை நீக்குவதற்கு மட்டுமல்லாமல், வியர்வையினால் ஏற்படும் பாக்டீரியாவையும் துர்நாற்றத்தையும் பெரும் அளவில் போக்குகிறது. வாரத்திற்கு ஒரு நாள் என்ற அளவில் இதனை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இது அனைவருக்கும் ஏற்றதா என்றால் கண்டிப்பாக இல்லை. இதனை பயன்படுத்தும் போது எரிச்சலும் அல்லது வீக்கமோ ஏற்படுவதாக உணர்ந்தால் இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.



5. உடல் சுத்தம்

நாம் அடிக்கடி முகத்தை கழுவி சுத்தமாக, பொலிவுடன் வைத்திருக்க விரும்புவது போலவே அக்குள் பகுதியையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் அணியும் உடையின் காரணமாகவும், தோல் பகுதியின் சுருங்கி விரியும் தன்மை காரணமாகவும் அந்தப் பகுதியில் காற்றோட்ட வசதி மிகவும் குறைவாக இருக்கும் இதனால் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே மேற்கூறிய ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு முறை அக்குள் பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்குவது ஆரோக்கியமானதாக இருக்கும்.

வைட்டமின் சப்ளிமெண்ட் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறதா..? அதிர்ச்சியூட்டும் ஆய்வு

மேலும் அதன் மூலம் அதிக அளவில் வியர்வை வருவது கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, எப்போதும் நம்மை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். உடலை சுத்தம் செய்வதற்கு கண்ட கண்ட ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான தாவரங்கள் மற்றும் மூலிகைகளிலிருந்து தயார் செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனால் பக்கவிளைவுகள் இல்லாமல் நாம் நமது சருமத்தினை பாதுகாக்க முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Underarm Care

அடுத்த செய்தி