• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீங்கள் அதிகமாக மனப்பதட்டம் அடைந்தால் கூட முடி உதிர்வு , சரும பாதிப்புகள் உண்டாகும் என்பது தெரியுமா..?

நீங்கள் அதிகமாக மனப்பதட்டம் அடைந்தால் கூட முடி உதிர்வு , சரும பாதிப்புகள் உண்டாகும் என்பது தெரியுமா..?

மனப்பதட்டம்

மனப்பதட்டம்

மனப்பதட்டத்தின் வெளிப்படையான அறிகுறிகள் முகத்தில் ஏற்படும் வெளிறிய சருமம் மற்றும் தோலில் லேசான வெடிப்புகள் மூலம் பிரதிபலிக்கின்றன.

  • Share this:
பல காரணங்களால் ஏற்படும் மனப்பதட்டம் மற்றும் கவலைகள் உடல் நலனை பாதிக்கும் என்பது பொதுவானது. உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நம் தோல் மற்றும் முடியையும் சேர்த்தே பாதிக்கின்றன கவலைகள். என்ன நடந்தாலும் அமைதியாக சூழ்நிலையை கடந்து செல்வோர் கூட, கொரோனா தொற்று ஏற்படுத்தி உள்ள தாக்கம் காரணமாக மன அழுத்ததில் சிக்கி தவிக்கின்றனர்.

கொரோனவால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற வேலை மற்றும் பொருளாதார சூழல் நிறைய பேருக்கு மனப்பதட்டத்தை அதிகரித்துள்ளது. மனப்பதட்டம் அதிகமாகும் போது அது தானாகவே முகத்தில் படரும் கவலை ரேகைகள் மூலமாக காட்டி கொடுத்து விடும். முடி மற்றும் சரும ஆரோக்கித்தை மனப்பதட்டம் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி தோல் மருத்துவம் மற்றும் அழகுசாதன நிபுணர்கள் கூறுவது பற்றி பார்ப்போம்.

மனப்பதட்டத்தின் வெளிப்படையான அறிகுறிகள் முகத்தில் ஏற்படும் வெளிறிய சருமம் மற்றும் தோலில் லேசான வெடிப்புகள் மூலம் பிரதிபலிக்கின்றன. மனப்பதட்டம் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. மேலும் இது முகப்பரு, தடிப்புகள், முடி உதிர்வு மற்றும் முடி மெலிதல் மேலும் பல சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. தொற்று காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும் தோல் பராமரிப்பு சுகாதாரத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். தூசுக்களில் அலைந்து, திரியாமல் வீட்டினுள்ளேயே இருந்தாலும் தொற்று ஏற்படுத்தியுள்ள பல தாக்கங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள மனஅழுத்தமானது தோல் மற்றும் முடி பராமரிப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.எனவே கிளன்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான, தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறோம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். வீட்டிலேயே இருந்தாலும் தலைமுடியை பொறுத்த வரை, தவறாமல் தலைக்கு எண்ணெய் வைப்பது, பிரஷ் அல்லது சீப்பை கொண்டு தவறாமல் முடி வாருவது, வாரத்திற்கு இரண்டு முறையாவது ஷாம்பூ மற்றும் கன்டிஷ்னரை கொண்டு தலை முடியை சுத்தம் செய்வது உள்ளிட்ட எளிய முறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

மனப்பதட்டத்தின் பக்க விளைவுகள்:

அதிக மன அழுத்தம் இருந்தால் முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம் ஆகியவை இதன் பொதுவான பொதுவான பக்க விளைவுகளாக இருக்கும். மனப்பதட்டமாக இருக்கும் போது, உடலானது கார்டிசோல் எனப்படும் ஹார்மோனை வெளியிடுகிறது. இது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படுகிறது. இந்த ஹார்மோன் சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி ஆக்ஸிஜனேற்ற (ஃப்ரீ ரேடிகல்ஸ்) அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இது சருமத்தில் சுருக்கங்களாக, கோடுகளாக மற்றும் மந்தமான தோலாக வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இது உடலில் வீக்கத்தையும் அதிகரித்து தோலழற்சி, ரோசாசியா, தடிப்புத் தோல் அழற்சி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் ஏற்படுகிறது.தலைமுடி & சரும ஆரோக்கியம்:

உயிர் வாழ முடி அவசியம் இல்லை என்றாலும் நமது உடல் ஏதேனும் சமநிலையில் இன்றி இருக்கும் போது முதலில் கஷ்டப்படுவது உங்கள் முடியாக தான் இருக்கிறது. எனவே முடி ஆரோக்கியத்தை பராமரிப்பது என்பது, உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே. சற்று மிதமான சூட்டில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயிலை பயன்படுத்தி வந்தால் சேதமடைந்த முடி சரியாகும்.

கொரோனா ஊரடங்கால் மனச்சோர்வு அடைந்துள்ள 50% இளைஞர்கள் - ஆய்வு..

சருமத்தை பொறுத்தவரை தோல் சிவத்தல், முகப்பரு போன்ற பல்வேறு வடிவங்களில் மன அழுத்தம் மிகவும் தெளிவாக கண்டறிய முடியும். எனவே தோல் பாதிப்பு மற்றும் வெடிப்புகள் இருந்தால் அதை உரித்து எடுப்பதை தவிர்த்து விட்டு, நாள்தோறும் குளிர்ந்த நீரில் அடிக்கடி முகத்தை கழுவலாம். உலர்ந்த சருமம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை சோப்பு உள்ளிட்ட நுரைக்கும் சுத்தப்படுத்தியால் முகத்தை கழுவ வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகளை தவறாமல் எடுத்து வந்தால் சரும பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உணவு முறையின் பங்கு:

வேலையிழப்பு அல்லது வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை காரணமாக வீட்டிலேயே இருந்தால் உடல் செயல்பாடுகள் குறைந்து செரிமான பிரச்சனை ஏற்படும். இதன் விளைவாகவும் எண்ணெய் சருமம், முகப்பரு, தோல் வெடிப்புகள் போன்றவை ஏற்படுகிறது. எனவே மக்கள் மக்கள் சத்தான மற்றும் சீரான உணவை உண்ண வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. வறுத்த மற்றும் காரமான உணவை தவிர்த்து வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் பாதாம், சோள எண்ணெய், காட்-லிவர் ஆயில், ஹேசல்நட், வேர்க்கடலை வெண்ணெய், குங்குமப்பூ எண்ணெய் இவற்றை சேர்த்து கொள்ளலாம்.மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம், உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது. எனவே நிறைய தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவங்களை அவ்வப்போது குடித்து கொண்டே இருக்க வேண்டும். மன அழுத்த காலத்திற்குள் நுழையப் போகிறோம் என்று தெரிந்து விட்டாலே உங்களை அமைதிப்படுத்தும் மற்றும் ஓய்வாக உணர வைக்கும் செயல்களை செய்ய முயற்சி செய்வது உங்கள் சரும மற்றும் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகளில் முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: