Home /News /lifestyle /

சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் வகையை தேர்வு செய்ய முழுமையான கைட்லைன்..!

சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் வகையை தேர்வு செய்ய முழுமையான கைட்லைன்..!

பவுண்டேஷன்

பவுண்டேஷன்

முகத்திற்கு மட்டுமல்ல, கழுத்து பகுதிக்கும் பவுண்டேஷன் பூசுவதை மறக்காதீர்கள், ஏனென்றால் முகத்தின் நிறம் கூடும் போது, அது கழுத்துப்பகுதியை மேலும் நிறம் குறைந்ததாக காட்டும்.

முகத்திற்கு மேக்கப் போடும் போது பவுண்டேஷன் பூச வேண்டியது கட்டாயம். இது சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் ஆகியவற்றை மறைத்து, முகம் முழுவதும் ஒரே நிறத்தில் மிளிர வைக்க உதவுகிறது. மேலும் உங்கள் முகத்தை நீண்ட நேரத்திற்கு மிளிர வைக்கிறது. பியூட்டி பிலெண்டர் அல்லது பவுண்டேஷன் பிரெஷ் பயன்படுத்தி பவுண்டேஷன் கீரிமை பூசினால், திட்டு திட்டாக படிந்து அழகை கெடுக்கும் விதமாக அமையாமல், முகம் முழுவதும் ஒரே அளவில் பரவுவதோடு, மேக்கப்பை மேலும் மெருகேற்றும் விதமாக அமையும்.

முகத்திற்கு மட்டுமல்ல, கழுத்து பகுதிக்கும் பவுண்டேஷன் பூசுவதை மறக்காதீர்கள், ஏனென்றால் முகத்தின் நிறம் கூடும் போது, அது கழுத்துப்பகுதியை மேலும் நிறம் குறைந்ததாக காட்டும். சரி மேக்கபிற்கு பவுண்டேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டோம், இதனைத் தொடர்ந்து எந்த வகை சருமத்திற்கு என்ன மாதிரியான பவுண்டேஷன் க்ரீமை பயன்படுத்த வேண்டும் என சர்வதேச ஒப்பனை கலைஞர் பூஜா சேத்தியா கொடுத்துள்ள சில டிப்ஸ்களை பார்க்கலாம்...

பவுண்டேஷன் கீரிமை முதலில் மணிக்கட்டில் தடவிப்பாருங்கள்

லைட் நிறத்தில் நீங்கள் தேர்வு செய்திருந்தால், முகத்தில் ஃபவுண்டஷன் போட்டதும், ஆஷ் நிறத்திற்கு மாறுவது போல் தெரியும், அதுவே டார்க் நிறத்தை தேர்வு செய்தால், உங்கள் முகம் கருப்பாக மாறுவது போல் தெரியும். எனவே எவ்வளவு அழகாக நீங்கள் மேக்அப் செய்தாலும் அது நிற மாற்றத்தால் பாழாகிவிடும். பொதுவாக இந்தியர்களின் ஸ்கின் டோன் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாம், கூல், நியூட்ரல் என்பது ஆகும்.



வாம் ஸ்கின் என்பது பார்ப்பதற்கு வெளிநாட்டவர்களை போல் வெளிர் நிறத்தில் உள்ளவர்களுடைய நிறத்தை குறிக்கும், கூல் ஸ்கின் டோன் என்பது பெரும்பாலான இந்தியர்களின் நிறத்தையும், நியூட்ரல் என்பது வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் கலந்த கலவை போல் தோன்றமளிப்பவர்களை குறிக்கும். இந்த மூன்றை அடிப்படையாக கொண்டு தான் உங்களுடைய பவுண்டேஷன் க்ரீமை தேர்வு செய்ய வேண்டும்.

காதலர் தின ஸ்பெஷல்: ‘செல்ப் லவ்’வை அதிகரிக்க வைக்கும் 5 சரும பராமரிப்பு டிப்ஸ்கள்!

எப்போதும் பவுண்டேஷன் க்ரிமை தேர்வு செய்யும் போது மணிக்கட்டில் தடவி பரிசோதிக்க வேண்டும். அப்போது உங்களுடைய நரம்புகளின் நிறம் மாறுபடுவதை வைத்து எந்த வகையான ஸ்கின் டோன் என்பதை ஈஸியாக கண்டறியலாம். அவை க்ரீம் பச்சை அல்லது ஆலிவ் நிறத்தில் இருந்தால், உங்களுடைய ஸ்கின் டோன் Warm வகையைச் சேர்ந்தது. ஊதா அல்லது நீல நிறத்தில் இருந்தால், உங்களுடைய ஸ்கின் டோன் Cool வகையைச் சேர்ந்தது.

ஸ்கின் டோன் மற்றும் அண்டர் டோன் நிறத்தை சரியாக கண்டறிந்துவிட்டாலே போதும் சரியான பவுண்டேஷனை தேடுவதற்கான நேரம் குறைந்துவிடும். அப்படி உங்களுடைய தோலின் நிறத்தை வைத்து நீங்கள் ஒரு பவுண்டேஷனை வாங்க முடிவெடுத்தால் அதனை முகத்தில் முயற்சித்து பார்க்காதீர்கள். மாறாக கழுத்து அல்லது கன்னத்தின் ஓரங்களில் தடவி பார்ப்பது நல்லது. ஏனென்றால் சிலருக்கு முகம் மற்றும் கையின் நிறம் மாறுபடும் என்பதால் தவறான பவுண்டேஷனை தேர்வு செய்ய நேரலாம்.



மேட் அல்லது டூவி:

டூவி வகை பவுண்டேஷன் க்ரீம்கள் நல்ல மாய்ஸ்சுரைஸ் நர்மல் சருமம் முதல் வறண்ட சருமம் வரை உள்ள அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. அதே சமயத்தில் மேட் பவுண்டேஷன்கள் எண்ணெய் தன்மை அதிகம் கொண்ட சருமத்திற்கு ஏற்றது.

ஆரஞ்சு பழத்தோலில் இத்தனை சருமக் குறிப்புகளா..? மலைக்க வைக்கும் அழகை பெற டிப்ஸ்..!

கவரேஜ் லெவல்:

பவுண்டேஷன் வகைகளைப் போலவே கவரேஜ் லெவல் லைட், மீடியம், ஃபுல் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை எளிமையாக நீங்கள் கவர் செய்ய விரும்பினால், மிதமான கரேஜ் கொண்ட ஃபவுண்டேஷனை வாங்குவது நல்லது. இந்த மாதிரியான ஃபவுண்டேஷன் தினசரி மேக் அப்பிற்கு பொருத்தமாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை முழுவதுமாக மறைக்க நினைத்தால், ஃபுல் கவரேஜ் ஃபவுண்டேஷன் தேர்வு செய்யுங்கள். இது நீண்ட நேரத்திற்கு அழியாமலும் இருக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Makeup

அடுத்த செய்தி