Home /News /lifestyle /

உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் ஹாட் ஸ்டோன் மசாஜ் தெரபி!

உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்யும் ஹாட் ஸ்டோன் மசாஜ் தெரபி!

ஹாட் ஸ்டோன் மசாஜ்

ஹாட் ஸ்டோன் மசாஜ்

பதட்டம், முதுகு வலி, மன அழுத்தம், சோர்வு நிலை போன்றவை நீங்குகின்றன.

  • News18
  • Last Updated :
    களைத்த உடலுக்கு மசாஜ்தான் சரியான தீர்வு. குறைந்தது மாதம் ஒரு முறையேனும் உடலுக்கு சிறந்த மசாஜ் கொடுத்தால் நல்ல மாற்றம், புத்துணர்ச்சி உண்டாகும். தற்போது  ஹாட் ஸ்டோன் மசாஜ் டிரெண்டில் கலக்கிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஹாட் ஸ்டோன் மசாஜ் செண்டர்களின் விளம்பரங்கள் , சென்டர்கள் அதிகரித்து வருகின்றன. ஹாட் ஸ்டோன் தெரபியில் என்ன பலன், என்ன மாதிரியான மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதைக் காணலாம்.



    ஹாட் ஸ்டோன் மசாஜ் தெரபி என்றால் என்ன ?

    ஹாட் ஸ்டோன் மசாஜ் என்பது மழ மழவென இருக்கும் கற்களைப் பயன்படுத்தி  உடம்பின் முக்கிய பகுதிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யப்படும். பின் கற்களை சூடு படுத்தி முக்கிய  நரம்புப் பகுதிகளில் வைப்பதுதான். இதை சொல்லும் போது அவ்வளவுதானா என சாதாரணமாகத் தெரியும். ஆனால் அதன் நுணுக்கங்கள் நீளமானது.



    ஆஸ்திரேலியாவின் பிரபலமான 'பசல்ட் நதி' யில் தான் இந்த கற்கள் கிடைக்கின்றன. அவை இயற்கையாகவே மழ மழவென இருக்கும். அதை இன்னும் உரசி மென்மையாக்கி அதில் கருப்பு நிற கோட்டிங் கொடுத்து பயன்படுத்துகின்றனர்.

    அந்தக் கற்களை அதற்கென கைத்தேர்ந்த மசாஜ் தெரபிஸ்டுகள் சூடு படுத்துவார்கள். அதன் சூடு பதம் 110 முதல் 130 டிகிரியில் இருக்கும். அந்தக் கற்களை மூளைக்கும், உடலுக்கு ரிலாக்ஸை ஏற்படுத்தக் கூடிய பகுதிகளில் அழுத்தம் கொடுத்து வைக்கின்றனர்.  கற்கள் உடல் முழுவதும் வைக்கப்படும். உள்ளங் கைகள், கால் விரல்களில் கூட சிறு சிறு கற்களை வைக்கின்றனர்.



    கற்களை வைப்பதற்கு முன் எண்ணெய் மசாஜ் அளிக்கின்றனர். பின் கற்களை வைத்து உடலில் வலி இருக்கும் இடங்களில் தேய்த்து அழுத்தம் கொடுக்கின்றனர். இந்த மசாஜ் 60 முதல் 90 நிமிடங்களுக்குச் செய்யப்படும். இதனால் உடல் வலி நீங்கி மனதிற்கும் ரிலாக்சாக இருக்கிறது.

    இதன் பயன்கள் என்ன ?



    இந்த ஸ்டோன் மசாஜை செய்து கொண்ட பலரும் ஆழ்ந்த ஓய்வு நிலையை அடைந்ததாகவும், சவுகரியமாகவும், உடல் புத்துணர்ச்சியை உணர்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
    தெரபிஸ்ட் அளிக்கும் அழுத்தத்தால் உடல் தசைகள் இலகி உடலுக்கு ஃபீல் ஃபிரீ உணர்வை அளிக்கிறது. மேலும் மருத்துவ ரீதியாக அணுகும்போது பதட்டம், முதுகு வலி, மன அழுத்தம், சோர்வு நிலை போன்றவை நீங்குவதாகத் தெரிவிக்கின்றன.

    வலி ஏற்படுமா ?



    கற்கள் சூடு செய்து உடம்பில் வைப்பதால் முதலில் அது சற்று பயத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அதன் வெப்பம் தாங்கக் கூடிய வகையில் வெது வெதுப்பாகவே இருக்கும். ஒருவேளை அது உங்களுக்கு அதிக வெப்பமாக இருப்பதை உணர்ந்தால் தெரபிஸ்டிடம் கூறி உங்கள் உடல் தேவைக்கு ஏற்ப வெப்பத்தை தனிக்கச் செய்யலாம். அதிக வெப்பம் உடல் சருமத்தை கருகச் செய்யும்.

    யாரெல்லாம் செய்து கொள்ளலாம் ?



    இந்த ஹாட் ஸ்டோன் தெரபியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். குழந்தைகள் மற்றும் கர்பினிகள் இந்த மசாஜை தவிர்த்தல் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் இருப்போர், மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போர் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இந்த தெரப்பியை எடுத்துக் கொள்ளலாம்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Health tips

    அடுத்த செய்தி