முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற எளிமையான வீட்டுக் குறிப்பு!

news18
Updated: March 24, 2019, 10:14 AM IST
முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற எளிமையான வீட்டுக் குறிப்பு!
மாதிரிப் படம்
news18
Updated: March 24, 2019, 10:14 AM IST
முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் வளர்வது பெண்மையின் அழகைக் கெடுத்துவிடும். இதனால் நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளவும் சங்கடமாக இருக்கும். இதற்காக பார்லர் சென்று அதிக செலவு செய்து முகத்தில் உள்ள ரோமங்களை நீக்குவோம். இனி அப்படி செய்யத் தேவையில்லை, வீட்டிலேயே இருக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பயன்படுத்தி ரோமங்களை நீக்கலாம்.

மஞ்சள் மற்றும் பால்: 
தேவையான பொருட்கள் :

மஞ்சள் - 1 Tsp
பால் - 1 Tsp

Loading...

செய்முறை: இரண்டையும் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால், தேவையற்ற முடிகள் நீங்கிவிடும். வாரம் இரண்டு முறை இப்படி செய்யலாம்.

முட்டை வெள்ளை பகுதி:தேவையான பொருட்கள்:

முட்டையின் வெள்ளைக்கரு - 1
சோள மாவு - 1 Tsp
சர்க்கரை - 1 Tsp

செய்முறை : முட்டையை நன்கு அடித்துக்கொண்டு சர்க்கரை சேர்த்துக் கலக்கியபின், சோளமாவு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக்கழுவுங்கள். முகத்தில் உள்ள ரோமங்கள் நாளடைவில் உதிர்ந்துவிடும்.

கடலை மாவுதேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 Tsp
மஞ்சள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : கடலை மாவை பேஸ்ட் போல் கலந்துகொண்டு முகத்தில் தடவ தேவையில்லாத முடிகள் உதிர்ந்துவிடும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

கோதுமை மாவு:தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 Tsp
பால் - 1 Tsp
மஞ்சள் - ஒரு சிட்டிகை

செய்முறை : அனைத்து பொருட்களையும் சரியான பதத்தில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி விடவும். வாரம் இரண்டு ,உறை செய்யலாம். உதட்டிற்கு மேல் உள்ள தேவையற்ற முடிகளும் அகன்றுவிடும்.

எலுமிச்சைதேவையான பொருட்கள்

எலுமிச்சை - 1
சர்க்கரை - 1 Tsp

செய்முறை : எலுமிச்சை சாறு பிழிந்து அதில் சர்க்கரை சேர்த்துக் கலக்கி முகம் முழுவதும் தடவி நன்குக் காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இதனால் முகத்தில் உள்ள ரோமங்கள் முற்றிலுமாக அகன்று முகம் தெளிவாகும்.
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...