ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கால்களில் தெரியும் கீரல் மற்றும் தழும்புகளால் ஷார்ட் டிரெஸ் அணியும்போது சங்கடமாக உள்ளதா..? ஹோம் ரெமடீஸ் இதோ...

கால்களில் தெரியும் கீரல் மற்றும் தழும்புகளால் ஷார்ட் டிரெஸ் அணியும்போது சங்கடமாக உள்ளதா..? ஹோம் ரெமடீஸ் இதோ...

கால் பராமரிப்பு

கால் பராமரிப்பு

பெருபாலானோர் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியத் திட்டமிடும்போது மட்டுமே கால்களுக்கும் சிறந்த கவனிப்பு தேவை என்பதை உணர்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஆடை அணியும்போது மட்டும் கால்களை கவனித்துக் கொள்ளாமல், மற்ற எல்லா நேரங்களிலும் கால்களையும் பராமரிப்பது அவசியம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொதுவாக பெண்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் வடுக்கள் அல்லது கருமையான புள்ளிகள் இருப்பதை விரும்பமாட்டார்கள். முக்கியமாக முகத்தில். எனவே, அவற்றை நீக்கிவதற்காக பலவிதமான தயாரிப்புகளை உபயோகப்படுத்துவர். ஆனால் கால்கள் என்று வரும் போது அவை பெரிதாக கவனிக்கப்படுவதில்லை. மற்ற உடல் உறுப்புகளுடன் ஒப்பிடுகையில் கால்கள், வெயில், ஹைப்பர் பிக்மென்டேஷன், உட்புற முடி, தடிப்புகள் என பல சிக்கல்களைச் சமாளிக்கின்றன.

  எனவே மேல் உடல் பாகங்களை அழகுபடுத்துவதற்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு கால்களுக்கும் கொடுக்க வேண்டும். பெருபாலானோர் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியத் திட்டமிடும்போது மட்டுமே கால்களுக்கும் சிறந்த கவனிப்பு தேவை என்பதை உணர்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஆடை அணியும்போது மட்டும் கால்களை கவனித்துக் கொள்ளாமல், மற்ற எல்லா நேரங்களிலும் கால்களையும் பராமரிப்பது அவசியம். இதற்காக நீங்கள் எந்த ஒரு தயாரிப்புகளையும் தேட வேண்டாம். சில எளிய வீட்டு வைத்தியங்களை வைத்தே உங்கள் கால்களில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் வடுக்களை நீக்கலாம்.

  1. ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar): ஆப்பிள் சிடர் வினிகர் உடலுக்கு நல்லது, குறிப்பாக பருமனானவர்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தருகின்றன. இது சிறந்த ப்ளீச்சிங் முகவர்களைக் கொண்டுள்ளது. இது ஸ்கின் டான்னிங், ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட சருமத்திற்கு உதவக்கூடும். இருப்பினும், இந்த வினிகரை மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உங்களது சருமம் சென்சிட்டிவ் ஸ்கின்னாக இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம். அதுவே சாதாரண அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் தோல் பாதிப்பைத் தவிர்க்க, அதன் செறிவூட்டப்பட்ட வடிவத்தில் இந்த வினிகரை பயன்படுத்தக்கூடாது.

  பயன்படுத்தும் முறை : 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து 6 தேக்கரண்டி தண்ணீரில் கலக்கவும். இது நீர்த்துப்போக உதவும். அதன் பிறகு ஒரு சிறிய காட்டன் துண்டை பயன்படுத்தி, உங்கள் கால்களில் உள்ள அனைத்து கரும்புள்ளிகள் மற்றும் வடுக்களில் வினிகரைத் தடவுங்கள். இந்த செயல்முறையை தினமும் செய்யவும். சிறிது நேரம் கழித்து கால்களை கழுவிய உடன் நல்ல ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

  Also Read : சருமத்தின் அனைத்து பிரச்சனைகளையும் போக்க வேண்டுமா..? இந்த ஐஸ் க்யூப்ஸை தயார் செஞ்சு வச்சுக்கோங்க..!

  2. சர்க்கரை ஸ்க்ரப் (Sugar Scrub) : பல ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் பல்வேறு அழகு நோக்கங்களுக்காக சர்க்கரை ஸ்க்ரப்பை பயன்படுத்துகின்றனர். இதன் சீரான தன்மையைப் பொறுத்து, தேவையற்ற உடல் முடி, கருமையான புள்ளிகள், அசுத்தங்கள் மற்றும் இறந்த செல்களை தோல் துளைகளிலிருந்து அகற்றுவது போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை ஸ்க்ரப் ஒரு இயற்கையான ஹியூமெக்டன்ட், இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும் தோல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்கிறது. உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரே நல்ல தீர்வு இதுதான்.

  பயன்படுத்தும் முறை : 2 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலக்கவும். இந்த கலவையை எடுத்து, உங்கள் கால்களில் வட்ட இயக்கங்களில் தேய்க்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் சருமம் மென்மையாக இருக்கும். சிறிது நேரம் கழித்து உங்கள் கால்களை சாதாரண நீரில் கழுவ வேண்டும். இரு தினங்களுக்கு ஒரு முறை இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

  Also Read :  “பிரவுன் சுகர் இருக்க பயமேன்”... நாட்டு சர்க்கரைக்குள் மறைந்திருக்கும் 6 நன்மைகள்..!

  3. குதிரைவாலி (Horseradish) : ஹார்ஸ்ராடிஷ் மிக அரிதாகவே அறியப்படும் ஒரு பொருள். ஆனால் சருமத்திற்கு ஒரு அற்புதமான மூலப்பொருளாக செயல்படுகிறது. இது சருமத்தை பிரகாசிக்க வைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகப்பரு ஆகியவற்றைக் நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்.

  பயன்படுத்தும் முறை : ஒரு பாத்திரத்தில் ஒரு குதிரைவாலியை நன்கு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ¼ கப் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து கலக்கி விட்டு, ஒரு ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும். சுமார் இரண்டு வாரங்களுக்கு ஜாடியில் கலவையை அப்படியே விட்டுவிடுங்கள். எப்போதாவது மட்டும் ஜாடியை நன்கு குலுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜாடியில் ஊற வைத்த கலவையை வடிகட்டி, அந்த சாறை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன்பிறகு, உங்கள் கால்களில் உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சாறை தினமும் பயன்படுத்துங்கள்.

  4. எலுமிச்சை (Lemon) : வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சையில் உள்ள இந்த ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தோல் பாதிப்பு மற்றும் முன்கூட்டிய வயதைக் குறைக்க உதவுகின்றன. இது தோல் ஒளிரும் பண்புகள் மற்றும் எண்ணெய் குறைக்கும் முகவர்களையும் கொண்டுள்ளது. அதன் சாற்றைப் பயன்படுத்தி உங்கள் கால்களில் கருமையான இடங்களை பொலிவடைய செய்யலாம்.

  Also Read : சரும பராமரிப்பில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மையை கொடுக்கும் யோகர்ட்..!

  பயன்படுத்தும் முறை : ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை பிழியவும். சிறிதளவு காட்டனை எலுமிச்சை சாறில் தோய்த்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்துங்கள். சிறந்த முடிவுகளைப் பெற இரு தினங்களுக்கு ஒருமுறை இதனைச் செய்யுங்கள்.

  5. வெள்ளரிக்காய் (Cucumbers) : வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களைச் செய்யும். அதன் நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல வைட்டமின்கள் மூலம் சருமத்தில் உள்ள கறுப்பு நிறத்தை மெதுவாக அகற்றலாம்.

  பயன்படுத்தும் முறை : வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதில் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்க்கவும். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள், சில நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவவும். சிறந்த முடிவுகளை பெற ஒவ்வொரு நாளும் இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Home remedies, Leg care