வீட்டில் இருக்கும் பொருட்களால் ஒரே நாளில் சரும பொலிவை அதிகரிக்கலாம்!

வீட்டில் இருக்கும் பொருட்களால் ஒரே நாளில் சரும பொலிவை அதிகரிக்கலாம்!

மாதிரி படம்

  • Share this:
பொலிவான சருமம் தற்செயலாக நடக்காது. சரியான உணவு, போதுமான அளவு தண்ணீர், உடல் உழைப்பு, மற்றும் உங்கள் தோல் வகைக்கு ஏற்ற தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியப்படும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மனித வாழ்வில் நாம் நமது உடல்நலத்திற்கும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் சருமத்தை வைத்தே சொல்லலாம். அந்த அளவுக்கு சரும பராமரிப்பு மிக மிக அவசியம்.

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமம் பொலிவுடன் இருக்கும். உடற்பயிற்சி செய்வதும், மன அழுத்தத்தை குறைப்பதும் சரும பராமரிப்பிற்கு முக்கியம். உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கும், பொலிவுடன் வைத்திருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

கருப்பாக இருப்பதை விட நல்லா காலரா இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகிறார்கள். இயற்கையாக கிடைத்த நிறத்தை மாற்ற முடியாது என்றாலும் இருக்கும் நிறம் வெயில், முறையான பராமரிப்பு இல்லாததால் உடலில் இருக்கும் நிறத்திலும் மாறுபாடு இருக்கவே செய்கிறது. சிலருக்கு முகம் மற்றும் உடல் நிறமிழந்து காணப்படும். இயற்கை பொருட்கள் மூலம் இதற்கான தீர்வை இங்கே காண்போம்.

குங்குமப்பூ மற்றும் பால் ஃபேஸ் மாஸ்க் :

ஒரு கிண்ணத்தில் 3-4 தேக்கரண்டி குளிர்ந்த பால் எடுத்து அதில் 2-3 குங்குமப்பூ இழைகளை சேர்த்து ஊற வைக்கவும். ஊற வைத்த பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகு அதை உங்கள் முகத்தில் பூசவும். முதல் மெல்லிய லேயர் காய்ந்ததும், மீண்டும் இரண்டு கோட்டுகளை முகத்தில் அப்ளை செய்யவும். இப்போது இதை ஒரு மணி நேரம் உங்கள் முகத்தில் விட்டுவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். குங்குமப்பூ அதன் பிரகாசமான பண்புகளுக்காக பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சரும மேற்பரப்பில் உள்ள இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. தினம்தோறும் இரவில் ஒரு டம்ளர் பாலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு பால் மிகவும் அவசியம். பால் நம் எலும்புகளை உறுதிப்படுத்தும்.மஞ்சள் மற்றும் பாசிப்பயறு மாவு ஃபேஸ் மாஸ்க் :

கஸ்தூரி மஞ்சள்-15 கிராம்
பாசிப்பயறு மாவு-25 கிராம்
குப்பைமேனி இலை சாறு-10ml
நாட்டு பசும்பால் - தேவையான அளவு

மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து ஒன்றாக சேர்த்து தேவையான பால் விட்டு பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். முதலில் வெதுவெதுப்பான சுடுநீரில், முகத்தை நன்றாக கழுவிய பின்பு, இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நீரில் கழுவி விட வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால், மூன்றே மாதங்களில் உங்களது சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். குறிப்பாக கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் நீங்கி, தோல் சுருக்கம் நீங்கும்.

ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் :

நாம் உண்ணும் ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் அதிக அளவில் வைட்டமின் C காணப்படுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனை பேஸ் பேக் போல் பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை நம்மால் பெற முடியும். அதே போல் ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் கலந்து சருமத்தில் தேய்த்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். நம் உடல்நலத்திற்கும் ஆரஞ்சு பழம் மிகவும் நல்லது.சந்தனம் மற்றும் ரோஸ் ஃபேஸ் மாஸ்க் :

2 தேக்கரண்டி சந்தனப் பொடியை, 4-5 தேக்கரண்டி குளிர்ந்த ரோஸ் வாட்டரில் கலக்கவும். இந்த முக மாஸ்க்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி அதை ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். ரோஸ்வாட்டர் சருமத்தின் PH அளவை சமப்படுத்த உதவும். இந்த கலவை உங்கள் சருமத்தை பொழிவாக்க உதவும்.

பப்பாளி மற்றும் பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க் :

பீட்ரூட்டை உணவாக எடுத்துக் கொண்டால் உடல்நலத்திற்கு நல்லது. இதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அவை உங்கள் சருமத்தை பொலிவு பெறச் செய்யும். முகப்பரு ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும். இதில் உள்ள இரும்பு, பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் சி சத்துக்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைப்பதற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் பீட்ரூட் மிக மிக நல்லது. நீங்கள் ஒரு இன்ஸ்டன்ட் முக பொலிவை விரும்பினால், அதற்கு முற்றிலும் பப்பாளியை நம்ப வேண்டும். ஒரு பப்பாளி துண்டை உங்கள் முகத்தில் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் உங்கள் முகம் பளிச் என்று மாறும். இது சருமத்தின் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

பூசணிக்காய் மற்றும் தக்காளி ஃபேஸ் மாஸ்க் :

ஆன்டி ஆக்ஸிடென்டுகள், வைட்டமின் A மற்றும் C, தாதுக்கள் பூசணிக்காயில் நிறைந்துள்ளன. தோலில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சருமத்தின் சீரான எண்ணெய் உற்பத்திக்கும் இது உதவும். சருமம் பொலிவு பெற பூசணி விதைகளை சாப்பிடலாம். அதே போல் 3 டீஸ்பூன் பூசணி, அரை டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு பிறகு கழுவலாம்.சரும பராமரிப்பு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தக்காளி. அதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தக்காளி சாறை சருமத்தில் தடவினால் பொலிவு பெறும். இது இயற்கையான சன் ஸ்கீரீனாக செயல்படக் கூடியது. தோல்கள் சுருங்குவதை தடுப்பதற்கும் தக்காளி உதவும்.

கேரட் ஃபேஸ் மாஸ்க் :

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சரும பொலிவு பெறுவதற்கான முக்கிய பங்காற்றுகிறது. இது உயிரணுக்கள் சிதைவதை தடுக்க உதவுகிறது. வயதான தோற்றம் ஏற்படாமல் குறைக்கும் பண்பும் இதற்கு உண்டு. திசு, கண்கள், எலும்புகள், பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உதவுகிறது. கேரட்டை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் முகப்பறு மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுக்கலாம். கேரட்டில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

லிப்ஸ்டிக்கே போடாமல் உங்கள் உதடு அழகாக தெரிய வேண்டுமா..? எளிமையான ஹோம் டிப்ஸ்..!

கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்:

கஸ்தூரி மஞ்சள் பெண்களுக்கு மட்டும் பயன் அளிக்கும் என்பதல்ல ஆண்களும் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சளுக்கு காட்டு மஞ்சள் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. நம் முகத்தில் உள்ள முகப்பரு, வியர்குரு, கட்டி, வறட்சித் தன்மை இவைகளை நீக்கும் தன்மையானது இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு உள்ளது. தேமல், அரிப்பு போன்ற தோல் பிரச்சனைகளையும் நிரந்தரமாக தீர்க்கும். தினம்தோறும் இதை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நம் தோலினுள் ஊடுருவி உடலில் துர்நாற்றம் வீசாமல் நம்மை எப்போதும் மனமாக வைத்திருக்கும்.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். அழகை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த அழகினை இயற்கையாக பெற வேண்டும் என்றால் மேற்சொன்னவற்றை பயன்படுத்தி பாருங்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published: