Home » News » Lifestyle » BEAUTY HOME REMEDIES FOR DARK CIRCLES AROUND EYE UNDER EYE DARKNESS SCS

கண்களைச் சுற்றி கருவளையமா? வீட்டிலேயே இருக்கு தீர்வு!

சரியான தூக்கமின்மை, வேலைச்சுமை உள்ளிட்ட காரணங்களாலும், கண்ணை சுற்றி கருவளையம் ஏற்படும்.

கண்களைச் சுற்றி கருவளையமா? வீட்டிலேயே இருக்கு தீர்வு!
கருவளையத்திற்கான டிப்ஸ்
  • Share this:
கண்களைச் சுற்றி கருவளையம் என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்னை. இதற்காக மார்க்கெட்டில் இன்று நிறைய க்ரீம்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் எது சரியான தீர்வை தரும் என்பதை கண்டறிவது கொஞ்சம் இடியாப்ப சிக்கல் தான். சரி இந்த கருவளையத்தை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும். அதோடு சரியான தூக்கமின்மை, வேலைச்சுமை உள்ளிட்ட காரணங்களாலும், கண்ணை சுற்றி கருவளையம் ஏற்படும். இதனால் முகம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு கீழ்கண்ட விஷயங்களை செய்யலாம்.

உருளைக்கிழங்கை அரைத்து அந்த சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.


home remedies for dark circles
கண்


தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா சேர்த்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.

பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.

சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.

டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.

ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading