ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பருக்களால் உருவான கரும்புள்ளிகள்... வீட்டிலேயே சரி செய்ய உதவும் ஸ்கிரப் ரெமடி...

பருக்களால் உருவான கரும்புள்ளிகள்... வீட்டிலேயே சரி செய்ய உதவும் ஸ்கிரப் ரெமடி...

பருக்களால் உருவான கரும்புள்ளிகள்

பருக்களால் உருவான கரும்புள்ளிகள்

உங்கள் உடம்பில் இருக்கும் கரும்புள்ளிகள் காரணமாக ஸ்டைலான ஆடைகளை அணிவதில் கூட பிரச்னை ஏற்படலாம். எனவே, இந்த கரும்புள்ளிகளை அகற்ற சரியான கவனிப்பு அவசியம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சிலருக்கு கரும்புள்ளிகள் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. முகம், கைகள், தோள் பகுதி, கழுத்து, முதுகு அல்லது கால்களில் அடிக்கடி வெளிப்படும் கரும்புள்ளிகள் மிகவும் சங்கடமாக இருக்கும். சருமத்தில் இயற்கைக்கு மாறான புள்ளிகள் பல காரணங்களால் ஏற்படலாம் ஆனால் அதன் விளைவாக அசவுகரியமாக உணர்வார்கள்.

  உங்கள் உடம்பில் இருக்கும் கரும்புள்ளிகள் காரணமாக ஸ்டைலான ஆடைகளை அணிவதில் கூட பிரச்னை ஏற்படலாம். எனவே, இந்த கரும்புள்ளிகளை அகற்ற சரியான கவனிப்பு அவசியம். ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து சரி செய்வது அவசியம். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற ஸ்க்ரப்பிங் ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஸ்க்ரப்பிங் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி, புதிய செல்களை உருவாகுகிறது. இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. இதற்கு நீங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே ஸ்க்ரப் தயாரித்து பயன்படுத்தலாம்.

  பாதாம், எலுமிச்சை ஸ்க்ரப் : பாதாம், எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் கலவையை ஸ்க்ரப்பாக பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பொலிவாகும். இதற்கு ஒரு பவுலில், 4 ஸ்பூன் பாதாம் பொடி, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பால் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். அதை 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். இதனை தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.

  ஓட்ஸ் மற்றும் தேன் ஸ்க்ரப் : ஓட்ஸ், பால் மற்றும் தேனில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்க்ரப் தேவையற்ற கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. பால் மற்றும் தேன் மெலனின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது, மேலும் சரும வறட்சியை நீக்குகிறது. இதற்கு 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், 1 ஸ்பூன் பால் மற்றும் 1/2 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், உடலில் உள்ள கரும்புள்ளிகளில் அப்ளை செய்து மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். 5 நிமிடங்களுக்கு ஸ்க்ரப் செய்து 10 நிமிடங்களுக்கு பின்னர் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

  Also Read :  சரும பராமரிப்பில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மையை கொடுக்கும் யோகர்ட்..!

  சந்தனம், மஞ்சள் மற்றும் கிளிசரின் ஸ்க்ரப் : சந்தனம் மற்றும் மஞ்சள் இரண்டும் அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. கிளிசரின் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் சந்தனம், மஞ்சள் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து இந்த பேக் 80% காய்ந்து போகும் வரை விடவும். இப்போது தண்ணீரை கொண்டு ஸ்க்ரப் செய்தவாறே கழுவுங்கள். சந்தானம் குளிர்ச்சியானது என்பதால் பருக்கள் வராமலும் தடுக்க உதவுகிறது.

  வெள்ளரிக்காய், சர்க்கரை ஸ்க்ரப் : வெள்ளரிக்காய், சர்க்கரை, பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தயார் செய்யப்படும் ஸ்க்ரப் உடனடி பலன் கிடைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுடன் வெள்ளரிக்காய் மற்றும் பால் சேர்க்கப்படுவதால் கரும்புள்ளிகள் மீது அற்புதமாக வேலை செய்யும். இதற்கு ஒரு வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை எடுத்து சருமம் மற்றும் உடலில் ஸ்ப்ரப் செய்யவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்த பின்னர் கழுவவும். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்.குறிப்பு : முகப்பரு பிரச்னை இருப்பவர்கள் ஸ்க்ரப் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Dark Spot, Skincare