எண்ணெய் என்பது சருமத்திற்கு அவசியமான ஒன்று. அதை அடிப்படையாகக் கொண்டு வந்தவைதான் இந்த மாய்ஸ்சரைஸர் கீரீம்கள். ஆனாலும் அந்த தூய எண்ணெய்க்கு நிகரான அழகு எந்த கெமிக்கல் பொருட்களாலும் தரவியலாது. அதோடு அவை எந்தவித பக்கவிளவுகளும் இல்லாதவை. சிக்கனமானவை. எனவே மூன்று வகையான எண்ணெய் கொண்டு பொலிவு தரும் சீரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
மீன் எண்ணெய்
விட்டமின் ஈ எண்ணெய்
ரோஸ் வாட்டர்
செய்முறை :
மீன் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ எண்ணெய் மருந்தகங்களிலேயே காப்ஸ்யூலாக விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
ஒரு மூடி கொண்ட டப்பாவில் மீன் எண்ணெய், விட்டமின் ஈ எண்ணெய்யை என 4 காப்ஸ்யூல் ஊற்றுங்கள். பின் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதோடு 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்துகொள்ளுங்கள். தற்போது மூடி போட்டு நன்கு கலக்குங்கள். இதனை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை தண்ணீரில் கழுவிவிடுங்கள். முகம் பளபளப்பாக மாறுவதை தானாக உணர்வீர்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.