அப்பழுக்கற்ற சருமத்தை பெற வெந்தய கிரீம் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

சரும வறட்சியை தடுக்கும். அழுக்குகளை நீக்கும்.

news18
Updated: July 24, 2019, 7:16 PM IST
அப்பழுக்கற்ற சருமத்தை பெற வெந்தய கிரீம் : வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!
வெந்தைய கிரீம்
news18
Updated: July 24, 2019, 7:16 PM IST
வெந்தயம் சருமத்திற்கு குளுமையை அளித்து ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவும். இதனால் சரும வறட்சியை தடுக்க முடியும். வெந்தயம் நச்சு நீக்கியாகவும் இருப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும்.

தினமும் பயன்படுத்தும் வகையில் வீட்டிலேயே வெந்தய ஜெல் கிரீம் தயாரிப்பது எவ்வாறு என்றுப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


வெந்தயம் - 2 ஸ்பூன்

மஞ்சள் - அரை ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

Loading...

தண்ணீர் - ஒரு கப்



செய்முறை :

வெந்தயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். அதோடு மஞ்சளும் சேர்த்து கொதிக்கவிடுங்கள்.

நன்குக் கொதித்து திட நிலைக்கு வரும்போது அணைத்துவிடவும். அதை தற்போது வடிகட்டியில் இறுத்து தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

தற்போது கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் சேர்த்து அதில் இந்த வெந்தயத் தண்ணீரையும் , ஒரு சிட்டிகை மஞ்சள் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.

அதை தற்போது நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஜெல் தன்மையில் நன்குக் கலந்ததும் அதை காற்று புகாத பாடிலில் கொட்டி பயன்படுத்துங்கள்.

தினமும் இரவு முகத்தில் தேய்த்து வட்ட பாதையில் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பிரகாசித்து தெளிவாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...